’லிப் கிஸ் ஒன்னு போதாது நாலஞ்சு வேணும்’ அடம்பிடிக்கும் கருப்பு பூனையின் சேட்டை; வீடியோ வைரல்

லிப் கிஸ் கேட்கும் பூனையின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. கருப்பு நிறத்தில் இருக்கும் அந்த பூனை உரிமையாளரை அழைத்து மீண்டும் மீண்டும் கொஞ்ச சொல்கிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 23, 2022, 12:54 PM IST
  • லிப் கிஸ் எனக்கு கொடுத்தே ஆக வேண்டும்
  • அடம்பிடித்து முத்தம் கேட்டு வாங்கும் பூனை
  • இணையத்தில் வைரலாகும் வீடியோ
’லிப் கிஸ் ஒன்னு போதாது நாலஞ்சு வேணும்’ அடம்பிடிக்கும் கருப்பு பூனையின் சேட்டை; வீடியோ வைரல் title=

வீட்டில் வளர்க்கும் பூனைகள் எப்போதும் துருதுருவென இருந்துகொண்டே இருக்கும். செல்லமாக வளர்க்கப்படும் பூனை இருந்துவிட்டால், வீட்டில் தனியாக இருக்கிறோம் என்ற எண்ணமே வராது. பூனையை பொறுத்தவரைக்கும் எத்தனைபேர் வீட்டில் இருந்தாலும், எல்லாரையும் நொடியில் சுற்றி வந்து அதனைப் பற்றி பேசவைத்துவிடும். அவற்றிடம் கிடைக்கும் அன்பும், அரவணைப்பும் புரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். இரவு நேரத்தில் அருகில் வந்து படுத்துக் கொள்ளும் பூனை, நாம் அப்செட்டாக இருக்கும் நேரத்தில் அது செய்யும் ஏதாவது ஒரு சேட்டை குபீர் என்ற சிரிப்பை ஏற்படுத்திவிடும்.

மேலும் படிக்க | என்னா ஒரு வில்லத்தனம்!! தவளையிடம் சிக்கிய பாம்பு, நக்கல் பூனை செய்த வேலை, வைரல் வீடியோ

ஒருவேளை அது கடுப்பான விஷயத்தை செய்துவிட்டால் கூட நாம் இருக்கும் கோபத்தை புரிந்து ஜெட் வேகத்தில் வெளியே கிளம்பிவிடும். ஆறஅமர பின்னர் வந்து ஒன்று செய்யாதது நம் கண்முன்னே அமர்ந்து நம்மை டெஸ்ட் செய்யும். நாம் ஜாலியாக இருப்பதை கண்டுபிடித்துவிட்டால் சேட்டையை தொடங்கிவிடும். இல்லை.... நாம் இன்னும் அப்செட்டாக இருக்கிறோம் என தெரிந்து கொண்டால் நம் பக்கமே வராது. அப்படியே ஓடிவிடும். ஆனால், அதனை ஒருநாள் காணாவிட்டாலும் ஏற்படும் பரிதவிப்பு மற்றும் வெறுமை வளர்ப்பவர்களுக்கே வெளிச்சம். இப்படி மனிதனுக்கும், பூனைக்குமான பாசப்பிணைப்பு என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

அப்படி பூனையின் மீது அளவற்ற அன்பை கொண்டிருக்கும் ஒருவரின் வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகியிருக்கிறது. அந்த வீடியோவில், தன்னை வளர்ப்பவரிடம் மீண்டும் மீண்டும் ஆசையாக முத்தம் கேட்கிறது பூனை. அவர் ஒரு முத்தம் கொடுத்தாலும் விடாமல் தடவி தடவி முத்தம் கேட்டு வாங்குகிறது. முத்தம் வாங்கிக் கொள்ளும் பூனைக்கும் ஆனந்தம், அதனை கொடுக்கும் உரிமையாளருக்கும் பேரானந்தம். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்களையும் கவர்ந்துள்ளது. 

மேலும் படிக்க | குசும்பு பிடித்த குரங்கின் குறும்பு, அடி வாங்கிய அப்பாவி முதியவர்: செம வைரலாகும் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News