சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு டெர்ம் 2 முடிவு 2022: சிபிஎஸ்இ முடிவுகள் cbseresults.nic.in: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு டெர்ம்-2 தேர்வு முடிவுகள் இன்று ஜூலை 4, 2022 சற்று நேரத்தில் வெளியாகயுள்ளது. அதன்படி 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இன் அதிகாரப்பூர்வ இணையதளமான cbseresults.nic.in இல் வெளியாகயுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு டெர்ம்-2 தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை இங்கிருந்து பார்வையிடலாம். அதேபோல் சிபிஎஸ்இ முடிவுகள் டிஜிலாக்கர் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் மாணவர்களுக்குக் கிடைக்கும். எனவே மாணவர்கள் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முடிவுகளை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | CBSE 10 வகுப்பு Term-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது


சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவைச் சரிபார்க்க இணையதளம் மற்றும் மொபைல் பயன்பாடு இதோ


  • cbseresults.nic.in

  • results.gov.in

  • digilocker.gov.in

  • DigiLocker app

  • UMANG App


சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் நிலைத் தேர்வை ஏப்ரல் 26 முதல் மே 24, 2022 வரை சிபிஎஸ்இ நடத்தியது. சிபிஎஸ்இ டெர்ம் 1 மற்றும் டெர்ம் 2 முடிவுகளுக்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


சிபிஎஸ்இ 10 ஆம்  வகுப்பு தேர்வு முடிவை எவ்வாறு சரிபார்க்கலாம்


* சிபிஎஸ்இ 10 ஆம்  வகுப்பு தேர்வு முடிவைப் பார்க்க, முதலில் cbse.gov.in அல்லது cbseresults.nic.in அல்லது digilocker.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
* சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு டெர்ம் 2 தேர்வு முடிவு இணைப்புகள் முகப்பு பக்கத்தில் தோன்றும்.
* உங்கள் வகுப்பைத் தேர்ந்தெடுத்து உள்நுழைவு விவரங்களை உள்ளிடுவதன் மூலம் சமர்ப்பிக்கவும்.
* உங்கள் சிபிஎஸ்இ முடிவைச் சரிபார்த்து, முடிவின் பிரிண்ட்அவுட்டையும் எடுத்துக் கொள்ளுங்கள்.


சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு 2022 – எஸ்எம்எஸ் மூலம் சரிபார்ப்பது


* முதலில் உங்கள் போனின் மெசேஜ் பாக்ஸுக்குச் செல்லவும்
* அங்கு ஆங்கிலத்தில்  சிபிஎஸ்இ 10 என டைப் செய்து உங்கள் ரோல் எண்ணை ஸ்பேஸ் கொடுத்து டைப் செய்யவும்.
* இப்போது இந்த செய்தியை 7738299899 க்கு அனுப்பவும்.
* இப்போது சிறிது நேரத்தில் உங்கள் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2022 உங்கள் மொபைலில் எஸ்எம்எஸ் மூலம் பெறலாம்.


சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு டெர்ம் 2 தேர்வு முடிவுகள் ஜூலை 10 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட் பெறுவது எப்படி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR