CBSE 10 வகுப்பு Term-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

CBSE 10th Term 2 Result 2022: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இன்று Term-2 தேர்வு முடிவுகளை அறிவிக்க உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 4, 2022, 06:37 AM IST
  • சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பி தேர்வு முடிவு 2022 இன்று வெளியீடு
  • மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் முக்கிய அறிவிப்பு
  • சிபிஎஸ்இ முடிவை ஆன்லைனில் பார்ப்பது எப்படி
CBSE 10 வகுப்பு Term-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது title=

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு டெர்ம் 2 முடிவு 2022: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இன்று டெர்ம்-2 தேர்வு முடிவுகளை இன்று அறிவிக்க உள்ளது. இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணி அளவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன்படி இன்று வெளியாகும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இன் அதிகாரப்பூர்வ இணையதளமான cbseresults.nic.in இல் சரிப்பார்க்கலாம். அதன்படி 10 ஆம் வகுப்பு டெர்ம்-2 தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை இங்கிருந்து பார்வையிடலாம். அதேபோல் சிபிஎஸ்இ முடிவுகள் டிஜிலாக்கர் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் மாணவர்களுக்குக் கிடைக்கும். எனவே மாணவர்கள் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முடிவுகளை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு 2022 - ஆன்லைனில் எவ்வாறு ரிசல்டை பார்ப்பது
* சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவைச் சரிபார்க்க, முதலில் cbse.gov.in அல்லது cbseresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
* அந்த இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில், 10 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ டெர்ம்-2 தேர்வு முடிவுக்கான இணைப்பைக் காணலாம், அதைக் கிளிக் செய்யவும்.


* இப்போது உங்களின் ரோல் எண், பள்ளிக் குறியீடு மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு உங்கள் தேர்வு முடிவை சமர்ப்பிக்கவும்.
* சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2022 நீங்கள் சமர்ப்பித்தவுடன் உங்கள் முன் உள்ள திரையில் காட்டப்படும்.
* இப்போது நீங்கள் அதை பிரிண்ட் அவுட் எடுத்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க | 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று செய்முறைத் தேர்வு

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு 2022 – டிஜிலாக்கரில் எவ்வாறு சரிபார்க்கலாம்
* உங்கள் முடிவைச் சரிபார்க்க, மாணவர்கள் digilocker.gov.in என்ற இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் பார்வையிடவும்.
* இப்போது ஆதார் எண் போன்ற கோரப்பட்ட விவரங்களை உள்ளிட்டு உள்நுழையவும்.
* அந்த முகப்புப் பக்கத்தில் உள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தைக் கிளிக் செய்யவும்.


* பின்னர் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கான டெர்ம் 2 ஆம் முடிவுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
* இப்போது உங்கள் 10 ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் தாள் உங்கள் முன் திரையில் தோன்றும்.
* இப்போது நீங்கள் அதை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுக்கலாம்.

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு 2022 – சிபிஎஸ்இ முடிவை எப்படி எஸ்எம்எஸ் மூலம் சரிபார்ப்பது
* முதலில் உங்கள் போனின் மெசேஜ் பாக்ஸுக்குச் செல்லவும்
* அங்கு ஆங்கிலத்தில்  சிபிஎஸ்இ 10 என டைப் செய்து உங்கள் ரோல் எண்ணை ஸ்பேஸ் கொடுத்து டைப் செய்யவும்.
* இப்போது இந்த செய்தியை 7738299899 க்கு அனுப்பவும்.
* இப்போது சிறிது நேரத்தில் உங்கள் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2022 உங்கள் மொபைலில் எஸ்எம்எஸ் மூலம் பெறலாம்.

இதற்கிடையில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு டெர்ம் 2 தேர்வு முடிவுகள் ஜூலை 10 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட் பெறுவது எப்படி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News