CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான அட்டவணை மே 18 ஆம் தேதி வெளியீடு...
CBSE 10, 12 ஆம் வகுப்பு போர்டு தேர்வுகள் 2020 டேட்ஷீட் வெளியீடு மே 18-க்கு ஒத்திவைக்கப்பட்டது!!
CBSE 10, 12 ஆம் வகுப்பு போர்டு தேர்வுகள் 2020 டேட்ஷீட் வெளியீடு மே 18-க்கு ஒத்திவைக்கப்பட்டது!!
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் சனிக்கிழமை (மே 16, 2020) மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மீதமுள்ள வாரியத் தேர்வுகளுக்கான முழுமையான தேதி தாளை வெளியிடுவதை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
தேர்வுக்கான தேதி தாள் இப்போது 2020 மே 18 அன்று அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ட்விட்டர் பக்கத்தில், "10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் வாரியத் தேர்வுகளின் தேதித் தாள்களை இறுதி செய்வதற்கு முன் சில கூடுதல் தொழில்நுட்ப அம்சங்களை CBSE கவனத்தில் கொண்டு வருகிறது, இதன் காரணமாக தேதித் தாள்கள் இப்போது திங்கள் அதாவது 18 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும். ஏற்படும் சிரமத்திற்கு மனம் வருந்துகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
முழுமையான தேதி தாளுக்கான அறிவிப்பு இன்று (மே 16) மாலை 5 மணிக்கு திட்டமிடப்பட்டது.
முன்னதாக, நாட்டில் 3,000 சிபிஎஸ்இ பள்ளிகள் மதிப்பீட்டு மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அறிவித்திருந்தார், அங்கிருந்து 1.5 கோடிக்கும் அதிகமான விடைத்தாள்கள் ஆசிரியர்களுக்கு மதிப்பீடு செய்ய அனுப்பப்படும்.
இந்த ஆண்டு முந்தைய முயற்சிகளில் தோல்வியுற்ற 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் / ஆஃப்லைன் தேர்வுகளை நடத்த CBSE தனது அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.