களைகட்டிய பாஜகவின் கொண்டாட்டங்கள்! மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி
Madhya Pradesh Poll Results: பாஜக அறுதி பெரும்பான்மை பெற்றது.... பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் விநியோகித்தும் பாஜகவினர் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஞாயிற்றுக்கிழமை போபாலில் உள்ள அவரது இல்லத்தில் மகிழ்ச்சியான மனநிலையில் காணப்பட்டார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் முதல்வர் மாளிகையில் வெற்றியைக் கொண்டாடுகிறார். மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்று, பெரும்பான்மையை வசப்படுத்தி, அமோக வெற்றியுடன் மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க உள்ளதால், அங்கு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலையும், தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. மத்தியப் பிரதேசத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மாலை அணிவித்தும் கொண்டாடினர்.
கட்சியின் மூத்த தலைவர்கள் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான், போபாலில் உள்ள கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார். பின்னர் மாநில பாஜக தலைவர் வி.டி.சர்மா மற்றும் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரை சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார்.
மேலும் படிக்க | முழு பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரும் பாஜக! எந்த மாநிலம் தெரியுமா?
இந்த சந்தர்ப்பத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடன் இருந்தார். தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 இடங்களில் பாஜக 161 இடங்களிலும், காங்கிரஸ் 66 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
230 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டமன்றத்திற்கான தேர்தல் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையேயான மாபெரும் மோதலாக இருந்தது. ஏனென்றால், மத்தியப் பிரதேசத்தில் 2018 இல் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
பின்னர் எம்எல்ஏக்களின் கிளர்ச்சியால் 15 மாதங்கள் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அதன் பிறகு சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. 2020 இல் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு விலகிய ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சிக்கு சவாலாக இருந்தார்.
மேலும் படிக்க | பிரதமர் மோடியே வெற்றிக்கு காரணம்! காரணங்களை அடுக்கும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்
இந்தத் தேர்தலை, மகளிருக்கான தனது நலத் திட்டங்களை நம்பிச் சந்தித்தது பாஜக என்றால் அது மிகையாகாது. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாதம் 1,250 ரூபாய் வழங்கும் ‘லாட்லி பெஹ்னா யோஜனா’ போன்ற திட்டங்களை ஷிவ்ராஜ் சிங் செளகானின் அரசு செயல்படுத்தியிருந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி இதனை தேர்தல் விளம்பரம் என்று விமர்சித்திருந்தது, அதை மக்கள் ஏற்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு செயல்படுத்தப்பட்ட தேர்தல் முயற்சி என்று காங்கிரஸ் வர்ணித்தாலும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் கட்சியின் பணிகள் இவை என்று பாஜக தலைவர்கள் தங்கள் பிரச்சாரத்தில் தெரிவித்தது எடுப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும், நாட்டின் பிரதமருமான நரேந்திர மோடி, மத்தியப் பிரதேசத்தில் நடத்திய பொதுக்கூட்டங்கள் மக்களின் இதயங்களைத் தொட்டதாக, மாநில முதலிவர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.
மேலும் படிக்க | Rajasthan Election Results 2023: காங்கிரஸ் வென்றால்... முதல்வர் பதவி யாருக்கு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ