உன்னாவ் கார் விபத்து வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் லக்னோ, உன்னாவ் உள்ளிட்ட 17 இடங்களில் அதிரடி சோதனை..!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சாகர் மீது காவல்துறையில் பாலியல் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, இந்த புகார் குறித்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், இதற்காக நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு முன் அந்த பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபார். 


அப்பகுதியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த வாரம் உன்னாவ் சிறுமி சென்ற கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சிறுமியின் உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர். சிறுமி மற்றும் அவரது வழக்கறிஞர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். இதில் சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 


இதனையடுத்து எம்.எல்.ஏ. குல்தீப் சிங் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.  உன்னாவ் பெண் பாலியல் புகார் தொடர்பான அனைத்து வழக்குகளையும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் மாற்றியது. மேலும், குல்தீப் செங்காருக்கு வழங்கப்பட்ட ஆயுத உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. 


இந்நிலையில், உன்னாவ் கார் விபத்து வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். லக்னோ, உன்னாவ், பாண்டா, பதேபூர் உள்ளிட்ட 17 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.