அக்னிபாத் திட்டம் மூலம் இந்தியாவின் மொத்த ராணுவ வீரர்களின் பணி நியமனத்தில் 25% பேரை ஒப்பந்த முறையில் மத்திய அரசு மணியமர்த்த உள்ளது. இதன் மூலம் மூப்படையிலும் வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னவென்றால் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ரூ.30,000 சம்பளத்தோடு, காப்பீடு, தங்குமிடம், உணவு என அனைத்து சலுகைகளும் கிடைக்கிறது.



பொதுவாக ராணுவ வீரர்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து மரியாதைகளும், சலுகைகளும் இந்த ஒப்பந்த பணியாளர்களுக்கும் கிடைக்கும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.


பணியில் இருக்கும்வரை 4 ஆண்டுகளும் தடையில்லாமல் சம்பளம் கிடைக்கும் என்றும், 4 ஆண்டுகள் முடிந்த பிறகு அவர்களிடம் இருந்து பிடிக்கப்பட்ட மாதத்தவனையான பணத்தை முழு தொகையோடு வட்டியையும் சேர்த்து அளிப்பதாகவும் உத்திரவாதம் அளித்துள்ளனர்.


மேலும் படிக்க | Bitcoin Crash: படு வீழ்ச்சியில் கிரிப்டோகரன்சி, அச்சத்தில் முதலீட்டாளர்கள்



4 ஆண்டு ஒப்பந்த பணிக்கு பிறகு 80% வீரர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். மேலும், 20 சதவீதம் பணியாளர்கள் ராணுவத்திலுள்ள கிளை வேலை வாய்ப்புகளுக்கு பணியமர்த்தப்படுவார்கள். வீரர்கள் விரும்பும் பட்சத்தில் முழு நேர ராணுவ வீரர்கள் ஆகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



பணியில் உள்ளவரை இவர்களை அக்னி வீரர்கள் என்று அழைப்பதாகவும் அறிவித்துள்ளனர். மேலும் பணியின்போது வீரருக்கு மரணம் ஏற்பட்டால் அவருக்கு ரூ. 48 லட்சம் வரையிலான உயிர் காப்பீட்டு திட்டம் அளிக்கப்படும் என்றும். 


பணியின் இடையில் உயிரிழக்க நேரிடும்போது காப்பீடு மற்றும் 4 ஆண்டுக்கான முழு சம்பளமும் வீரரின் குடும்பத்தாருக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் படிக்க | Google Pay, PhonePe பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை! UPI-ல் நடக்கும் மோசடி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR