மத்திய அரசு 22 யூடியூப் சேனல்கள், 3 ட்விட்டர் கணக்குகளை முடக்கியுள்ளது
கடந்த ஜனவரி மாதத்தில், இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை பரப்புவதில் ஈடுபட்டிருந்த 35 யூடியூப் அடிப்படையிலான செய்தி சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்களை அமைச்சகம் முடக்கியது என்று தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் அபூர்வ சந்திரா கூறினார்.
புதுடெல்லி: இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக 22 யூடியூப் சேனல்களை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் செவ்வாய்கிழமை முடக்கியுள்ளது என ANIசெய்தி வெளியிட்டுள்ளது. இதில் 4 பாகிஸ்தானில் இருந்து இயங்குபவை என கூறப்படுகிறது. மேலும், 3 ட்விட்டர் கணக்குகள், 1 ஃபேஸ்புக் கணக்கு, ஒரு செய்தி இணையதளம் ஆகியவையும் முடக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில், இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை பரப்புவதில் ஈடுபட்டிருந்த 35 யூடியூப் அடிப்படையிலான செய்தி சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்களை அமைச்சகம் முடக்கியது என்று தகவல் ஒலிபரப்பு துறை செயலர் அபூர்வ சந்திரா கூறினார்.
மேலும் படிக்க | பெட்ரோல் டீசல் விலை குறையுமா; நிதி அமைச்சர் கூறுவது என்ன..!!
2021 ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகளின் அவசர விதிகளின் கீழ் இந்த தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக தகவல் ஒலிபரப்பு துறை கூறியுள்ளது. இந்திய உளவுத்துறை அமைப்புகள் இந்த சமூக ஊடக கணக்குகள் மற்றும் இணையதளங்களை உன்னிப்பாகக் கண்காணித்து, உடனடி நடவடிக்கை எடுக்க அமைச்சகத்திடம் தெரிவித்தது.
மேலும் படிக்க | வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்தது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR