குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற, 'பெர் டிராப் மோர் கிராப்' திட்டத்தின் கீழ் மத்திய அரசு பல்வேறு மாநிலங்களின் விவசாயிகளுக்கு உதவ 4000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் கிருஷி சின்சாயி யோஜனா(PM Krishi Sinchayee Yojana)-வின் ஒரு அங்கமான 'பெர் டிராப் மோர் கிராப்' என்ற திட்டம், வயல்களில் சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பான் பாசன முறைகள் போன்ற நுண்ணிய நீர்ப்பாசன நுட்பங்களை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டங்கள் மூலம் குறைந்தளவு தண்ணீரைப் பயன்படுத்தி அதிக மகசூலை விவசாயிகள் பெறலாம்.


தினசரி 50 KM நடைபயணம்; கடும் வெப்பத்தில் வாழ்க்கையை தேடும் விவசாயிகள்...


இந்த நீர்ப்பாசன நுட்பம் தண்ணீரை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், உரங்களின் நுகர்வு மற்றும் உழைப்பு செலவையும் குறைக்கிறது, இது விவசாய செலவைக் குறைத்து விளைச்சலை அதிகரிக்கும். 


இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி தொகை குறித்து மாநிலங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ஒவ்வொரு துளி நீரையும் பாசனத்தில் பயன்படுத்த மத்திய அரசு "பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சய் யோஜனா(PM Krishi Sinchayee Yojana)"-யை இயக்கியுள்ளது. 'டிராப் மோர் கிராப் - மைக்ரோ பாசனம்' திட்டத்தையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில், நவீன நீர்ப்பாசன நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என இதுதொடர்பான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இது தவிர, தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியுடன் (நபார்ட்) ரூ.5000 கோடி மைக்ரோ பாசன நிதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதியுடன் மைக்ரோ பாசன திட்டங்கள் ஊக்குவிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை ஆந்திராவுக்கு ரூ.616.14 கோடியும், நபார்டு மூலம் மைக்ரோ பாசன நிதி மூலம் தமிழகத்திற்கு ரூ.478.79 கோடியும் வெளியிடப்பட்டுள்ளன.


ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.1.6 லட்சம் வட்டியில்லா கடன்; மத்திய அரசு திட்டம்!...


மாநில அரசு அளிக்கும் மானியம்


பிரதமர் கிருஷி சிஞ்சய் யோஜனாவின் கீழ், சிறு விவசாயிகளுக்கு 90 சதவீதமும், பொது விவசாயிகளுக்கு 80 சதவீத மானியமும் கிடைக்கிறது. மானியம் பெற விவசாயிகள் வேளாண்மைத் துறையின் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாநில அரசின் மானியத் திட்டமும் வேறுபட்டது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.