Govt Pensioners Monthly Pension Date Update:  அரசு பணியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கக்கூடிய தேதியில் திடீர் மாற்றம் செய்து வங்கிகளுக்கு அரசு சார்பில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தகவல்களை தெரிந்துக்கொள்ளுங்கள். என்ன மாதிரி உத்தரவு வந்து பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எதற்காக மாத ஓய்வூதியம் தேதியில் மாற்றம் செய்யப்பட்டது. இதனால் யாருக்கு பயன்? போன்ற விவரங்களை பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாட்களில் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத்தை வரவு வைக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. 


ஓய்வூதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், இதனால் நிதிச்சுமையும், மனக்கவலையும் ஏற்படுவதாகவும் ஓய்வூதியம் பெறுவோர்களிடம் இருந்து தொடந்து புகார்கள் வந்துக்கொண்டு இருந்தது.


இதனையடுத்து நிதி அமைச்சகம், "ஓய்வூதியம் வழங்கக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளுக்கு அலுவலகக் குறிப்பு சுற்றறிக்கை கடந்த மாதம் அனுப்பப்பட்டது.


அந்த அலுவலகக் குறிப்பி‌ல், மார்ச் மாதம் தவிர, மற்ற அனைத்து மாதங்களுக்கான ஓய்வூதியம், அந்தந்த மாதத்தின் கடைசி வேலை நாள் அன்றே ஓய்வூதியதாரரின் வாங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


மேலும் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் கடைசி நாளில் கணக்கு முடித்தல் பணி இருப்பதால், மார்ச் மாதத்திற்கான ஓய்வூதியம் மற்றும் ஏப்ரல் மாதத்தின் முதல் வேலை நாள் அன்று செலுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. 


இந்த நடைமுறையை பின்பற்றுவதை உறுதி செய்யக்கூடிய வகையில் வங்கிகளில் ஓய்வூதியம் வரவு வைத்தவுடன், அன்றே மின்னணு அறிக்கையினை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளன. 


இதனை கடைபிடிக்க தவறினால் சம்பந்தப்பட்ட வங்கிகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. நிதி அமைச்சகத்தின் இந்த உத்தரவால் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மேலும் படிக்க - விரைவில் தீபாவளி 2024 பரிசு: குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிறது புதிய அறிவிப்பு!


மேலும் படிக்க - ஒரு பக்கம் போனஸ், மறுபக்கம் போராட்டம்.. அரசு ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு!


மேலும் படிக்க - Good News | அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. விரைவில் அகவிலைப்படி, தீபாவளி போனஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ