புது டெல்லி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜனை பற்றாக்குறை இருப்பதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், ஒரு மாநிலத்தில் இருந்து, மற்றொரு மாநிலத்திற்கு ஆக்சிஜனை கொண்டு செல்ல தடை இருக்கக்கூடாது. குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் சப்ளையை என கட்டுப்படுத்த முடியாது என்று உறுதியான உத்தரவை உள்துறை அமைச்சகம் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுக்குறித்து அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை முழுமையாக செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


"மருத்துவ ஆக்ஸிஜன் (Medical Oxygen) சிலிண்டர்கள் போதுமான மற்றும் தடையற்ற சப்ளை கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், ஆக்சிஜன் ஏற்றி செல்லும் வாகனங்களை அதிகாரிகள் யாரும் தடுத்து நிறுத்தக்கூடாது என உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டு உள்ளது.


ALSO READ |  கடன் வாங்குவீர்களோ, பிச்சை எடுப்பீர்களோ, நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க வேண்டும்


"மருத்துவ ஆக்ஸிஜன் ஒரு அத்தியாவசிய பொது சுகாதாரப் பொருளாகும், மேலும் நாட்டில் மருத்துவ ஆக்ஸிஜன் வழங்குவதில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் அது நோயாளிகளின் உடல்நிலை மோசமாக பாதிக்கலாம்". 


 



ஆக்ஸிஜன் சப்ளை மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே விரைவாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த உத்தரவை உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs) பிறப்பித்துள்ளது. 


தனது உத்தரவில், "மாநிலத்திற்கு இடையில் மருத்துவ ஆக்ஸிஜன் கொண்டுசெல்ல எந்த தடையும் விதிக்கப்பட மாட்டாது. அதன்படி ஆக்ஸிஜன் சுமந்து செல்லும் வாகனங்களை தங்கு தடையின்றி செல்ல அனுமதிக்க போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்."


ஏப்ரல் 22, 2021 முதல் "அடுத்த உத்தரவு வரும் வரை" மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஆக்ஸிஜனின் விநியோகத் திட்டத்தை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. 


ALSO READ |  ஆக்சிஜன் அதிக அளவில் உள்ள உணவுப் பொருட்கள் கொரோனாவை விரட்டுமா?


இந்த வழிகாட்டுதல்களைச் செயல்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் / துணை ஆணையர்கள் மற்றும் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் பொறுப்பு வகிப்பார்கள். 


தற்போது நாட்டில் COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR