COVID-19 Vaccine: கல்வி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கான வழிமுறைகள்
புதிய வழிகாட்டுதல்களை உடனடியாக நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
புதுடெல்லி: கல்வி, வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வோருக்கு முன்னுரிமை அளித்து கோவிட் -19 தடுப்பூசிகளை வழங்குவதாக மத்திய அரசு திங்கள்கிழமை (ஜூன் 7, 2021) அறிவித்தது.
கோவிஷீல்ட்டின் (Covishield) முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸுக்கு இடையில் 84 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் டோஸ் மட்டுமே எடுத்துக் கொண்ட நபர்கள், கல்வி அல்லது வேலை வாய்ப்பிற்காக வெளிநாட்டிற்கு செல்ல வேண்டி வந்தால், அவர்களுக்கு முன்னுரிமை அளித்து, முன்னதாகவே தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் அளிக்க மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், மாநிலங்கள் மற்றும் யூனியன் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள, புதிய வழிகாட்டுதல்களை உடனடியாக நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
முதல் டோஸ் போட்டுக் கொண்ட பின் 84 நாட்களுக்கு முன்னதாகவே இரண்டாவது டோஸ் பெற கீழ்கண்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரி கவனிக்க வேண்டும்.
1. முதல் டோஸ் செலுத்தி கொண்டு 28 ஆகி விட்டதா என்பதை அறிதல்.
2. பயண நோக்கத்தின் உண்மையான தன்மையை கீழ்கண்ட ஆவணங்கள் மூலம் ஆராய அறிவுறுத்தல்
i. சேர்க்கைக்கான சலுகைகள் அல்லது கல்விக்கான முறையான தகவல் தொடர்புகள்.
ii. குறிப்பிட்ட நபர் ஏற்கனவே ஒரு வெளிநாட்டு கல்வி நிறுவனத்தில் படித்து வரும் நிலையில் கல்வியைத் தொடர அந்த கல்வி நிறுவனத்திற்குத் திரும்ப வேண்டிய நிலை உள்ளதா என்பதற்கான ஆவணம்
iii. வேலைக்கான நேர்காணல் கடிதம் அல்லது வேலைவாய்ப்பிற்கான கடிதம் அல்லது இ-மைல்
ALSO READ | Covaxin Vs Covishield: ஆய்வில் வெளியான ஆச்சர்ய தகவல்கள்
3. தற்போதைய வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்பட்ட அடையாள ஆவணங்களில் ஒன்றான பாஸ்போர்ட் ஆவணத்தை காட்டி தடுப்பூசி பெறப்படலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதில் பாஸ்போர்ட் எண் சான்றிதழில் அச்சிடப்படுகிறது. முதல் டோஸ் போட்டுக் கொள்கையில் பாஸ்போர்ட் பயன்படுத்தப்படாவிட்டால், தடுப்பூசிக்கு பயன்படுத்தப்படும் புகைப்பட அடையாள அட்டையின் விவரங்கள் தடுப்பூசி சான்றிதழில் அச்சிடப்படும். இந்நிலையில் தேவைப்பட்டால், தடுப்பூசி சான்றிதழை, பயனாளியின் பாஸ்போர்ட் எண்ணுடன் இணைக்கும் மற்றொரு சான்றிதழை அதிகாரிகள் வழங்கலாம்.
4. ஆகஸ்ட் 31, 2021 வரையிலான காலகட்டத்தில் இந்த குறிப்பிட்ட நோக்கங்களுக்காக சர்வதேச பயணத்தை மேற்கொள்ள வேண்டியவர்களுக்கு இந்த சேவை கிடைக்கும்.
5. COVID தடுப்பூசி மையங்கள் மற்றும் AEFI மேலாண்மை போன்றவை குறித்து அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைத்து தொழில்நுட்ப நெறிமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் 2 வது டோஸை பொட்டுக் கொள்ள, பதிவு செய்யும் வகையில் கோவின் (CoWIN) அமைப்பில் விரைவில் மாற்றங்கள் செய்யப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
ALSO READ | மாம்பழம் சாப்பிட்ட பின் எடுத்துக் கொள்ளக் கூடாத 5 உணவுகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR