மத்திய அரசு மூன்று ஆண்டுகளுக்கு வேளான் சட்டங்களை இடைநிறுத்த வேண்டும்: பாபா ராம்தேவ்
தங்கள் நிலைப்பாட்டில் சிறிய தளர்வை ஏற்படுத்திக்கொள்ள அரசும் தயாராக இல்லை, விவசாயிகளும் தயாராக இல்லை என கூறிய பாபா ராம்தேவ், இந்த முட்டுக்கட்டை முடிவுக்கு வர வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
புதுடெல்லி: வேளான் சட்டங்களை மூன்று வருட காலத்திற்கு இடைநிறுத்தி, அதன் மூலம் விவசாயிகளின் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருமாறு யோகா குரு பாபா ராம்தேவ் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் அமைதி நிலவ வேண்டும் என தான் விரும்புவதாக அவர் கூறினார்.
பாபா ராம்தேவ், ஹரியானாவின் சமல்காவில் ஒரு தொழிலதிபரின் திருமணத்தில் கலந்துகொண்டபோது, விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து பேச முடிவு செய்தார். அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளராகவோ அல்லது ஒப்பந்த விவசாயியாகவோ இந்த பிரச்சனை குறித்து பேச விரும்பவில்லை என்றும், இப்பிரச்சனையில் தான் ஒரு தீர்வைக் காண விரும்புவதாகவும் அவர் கூறினார்.
புதிய வேளான் சட்டங்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று ராம்தேவ் (Baba Ramdev) மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் விவசாயிகள் அரசாங்கத்துடன் அமர்ந்து, விவசாயிகள் மற்றும் நாட்டின் நலன்களுக்கான கொள்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ALSO READ: தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6 அன்று சட்டமன்ற தேர்தல்கள் நடக்கும்: தலைமை தேர்தல் ஆணையர்
தங்கள் நிலைப்பாட்டில் சிறிய தளர்வை ஏற்படுத்திக்கொள்ள அரசும் தயாராக இல்லை, விவசாயிகளும் (Farmers) தயாராக இல்லை என கூறிய அவர், இந்த முட்டுக்கட்டை முடிவுக்கு வர வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். "அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு நடுநிலையான நிலைப்பாடு உள்ளது” என்று அவர் கூறினார்.
இந்த சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளாக அமல்படுத்தாமல் இருப்பது குறித்து அரசாங்கம் ஏற்கனவே பேசியதாகவும் ராம்தேவ் கூறினார். இந்த கால அவகாசம் போதாது என்று விவசாயிகள் உணர்ந்தால், மத்திய அரசு அதை மூன்று ஆண்டுகளாக அதிகரிக்க வேண்டும் என்றார் அவர். இந்த நேரத்தில், விவசாயிகளும் அரசாங்கமும் ஒன்றாக அமர்ந்து விவசாயம் மற்றும் நாட்டின் நலன் பற்றி விவாதித்து எது சரியானது என்பதை முடிவு செய்து அது தொடர்பான சட்டங்களை ஏற்படுத்த வேண்டும் என ராம்தேவ் கூறினார்.
புதிதாக இயற்றப்பட்ட மூன்று வேளான் சட்டங்களுக்கு (Farm Laws) எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். தில்லியின் எல்லைகளில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுடன் அரசாங்கம் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திவிட்டது. எனினும், இந்த பிரசனைக்கு இன்னும் ஒரு தெளிவான முடிவு ஏற்படவில்லை.
ALSO READ: முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு அருகில் காரில் வெடிபொருட்கள், அச்சுறுத்தல் கடிதம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR