‘விவசாயிகளும் அதிகாரிகளும் அதிகபட்ச கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்’-ஐ.நா.

கடந்த செப்டம்பரில் இயற்றப்பட்ட மூன்று வேளான் சட்டங்களை ரத்து செய்வதற்கான ஆர்ப்பாட்டங்கள் டெல்லி எல்லையில் நவம்பர் 28 அன்று தொடங்கின.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 6, 2021, 09:08 AM IST
  • விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் ஆலோசனை.
  • அதிகபட்ச கட்டுப்பாட்டை இரு தரப்பும் கடைப்பிடிக்க வேண்டும் – மனித உரிமை ஆணையம்.
  • பேச்சுவார்த்தையே நிலையான தீர்வைத் தரும் – ஐ.நா.
‘விவசாயிகளும் அதிகாரிகளும் அதிகபட்ச கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்’-ஐ.நா. title=

புதுடெல்லி: புதிய வேளான் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கும், பிரச்சனையை தீர்க்க முயன்று கொண்டிருக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் வெள்ளிக்கிழமை ஆலோசனை வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் (OHCHR) அலுவலகம், ஒரு ட்வீட்டில் அமைதியான வகையில் கூட்டங்களை நடத்துமாறும் கருத்து வெளிப்பாட்டிற்கான உரிமைகள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் என இரண்டு வழிகளிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

“#India: நடந்துகொண்டிருக்கும் #FarmersProtests இல் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் மற்றும் போராட்டக்காரர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அமைதியான வகையில் கூட்டங்களை நடத்துமாறும் கருத்து வெளிப்பாட்டிற்கான உரிமைகள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் என இரண்டு வழிகளிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். அனைவரது மனித உரிமைகளும் காக்கப்படும் வகையில் சமமான தீர்வுகளைக் கண்டறிவது மிக முக்கியமானது” என்று ஐக்கிய நாடுகள் சபையின் (United Nations) மனித உரிமைகளுக்கான அமைப்பு ட்வீட் செய்தது.

ALSO READ: Farmers Protest: அமெரிக்காவின் கருத்து சிலருக்கு இடியாய் விழுந்தது!!

மூன்று வேளான் சட்டங்களையும் (Farm Laws) முழுமையாக ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் 70 நாட்களுக்கு மேலாக டெல்லியின் மூன்று எல்லைப் பகுதிகளிலும் முகாமிட்டுள்ளனர்.

வேளான் சட்டங்களை எதிர்த்து உழவர் சங்கங்களின் முக்கிய அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா (SKM) பிப்ரவரி 6 ம் தேதி டெல்லியில் (Delhi) 'சக்கா ஜாம்' இருக்காது என்று கூறியது. எனினும், நாட்டின் பிற பகுதிகளில் உள்ள விவசாயிகள் அமைதியான முறையில் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மூன்று மணி நேரம் பாதையை மறித்து போராட்டம் செய்வார்கள் என்று அந்த அமைப்பு கூறியது. இந்த வார தொடக்கத்தில் எஸ்.கே.எம் இந்த நாடு தழுவிய சக்கா ஜாமை அறிவித்தது. இணைய தடைக்கு எதிராக விவசாயிகள் இந்த போராட்டத்யில் ஈடுபடுவார்கள் என அறிவிகப்பட்டது.

அரசாங்கத்துக்கும் உழவர் சங்கங்களுக்கும் இடையில் நடந்த பல சுற்று பேச்சுவார்த்தைகள் பலனின்றி முடங்கிக் கிடக்கின்றன. கடந்த செப்டம்பரில் இயற்றப்பட்ட மூன்று வேளான் சட்டங்களை ரத்து செய்வதற்கான ஆர்ப்பாட்டங்கள் டெல்லி எல்லையில் நவம்பர் 28 அன்று தொடங்கின.

வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, இந்தியாவின் ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் அரசியலின் பின்னணியில் இந்த போராட்டங்கள் பார்க்கப்பட வேண்டும் என்றார். இந்த விவகாரத்தை தீர்க்க, அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட உழவர் குழுக்களுக்கு ஒடையில் பல வித முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என அவர் மேலும் கூறினார்.

"இந்திய நாடாளுமன்றம், ஒரு முழு விவாதத்திற்கு பின்னர், விவசாயத் துறை தொடர்பான சீர்திருத்தவாத சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சீர்திருத்தங்கள் விரிவாக்கப்பட்ட சந்தை அணுகலை அளிக்கின்றன மற்றும் விவசாயிகளுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்கின. அவை பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான விவசாயத்திற்கும் வழி வகுக்கின்றன” என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு நபர்கள் மற்றும் நிறுவனங்களின் கருத்துக்களுக்கு வலுவான பதில் அளித்த அமைச்சகம், உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் கருத்துகளும் பகிரப்படும் ஹேஷ்டேகுகளும் சரியானவையும் அல்ல, சமூக பொறுப்பிடையவர்கள் செய்யும் பணியும் அல்ல என்று கூறியது.

ALSO READ: 'சக்கா ஜாம்' என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் 3 மணி நேர போராட்டம்..

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News