சண்டிகர் மேயர் தேர்தல்: ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் வெற்றி என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
Chandigarh Mayor Polls Result: சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.
Chandigarh News: தலைமை நீதிபதி (CJI) DY சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கரை வெற்றியாளராக அறிவிக்க தேர்தல் அதிகாரி அனில் மாசிஹ் எடுத்த முடிவை ரத்து செய்தது. மசி குல்தீப்புக்கு ஆதரவாக பதிவான 8 வாக்குகளை சிதைத்து செல்லாது என அறிவித்து, சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. அதாவது தேர்தல் நடத்தும் அதிகாரி முறைகேடு செய்து பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மறு வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் "செல்லாத" எட்டு வாக்குகளையும் செல்லுபடியாகும் என அறிவித்தது. சண்டிகர் மேயர் தேர்தல் முடிவைச் செயல்படுத்த உத்தரவிட்டது. சண்டிகர் மேயர் தேர்தலை நடத்தி வாக்குச் சீட்டுகளில் முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் மீதும் உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
என்ன நடந்தது?
சண்டிகர் மேயர் தேர்தல் ஜனவரி 30 அன்று நடைபெற்றது. 20 வாக்குகள் வைத்திருந்தபோதிலும், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்தது. ஆனால் 16 வாக்குகள் மட்டுமே வைத்திருந்த பாஜக வெற்றி பெற்றது. இந்த மேஜிக் எப்படி நடந்தது என்று ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாது என தலைமை அதிகாரி அனில் மசிஹ் அறிவித்ததால் இது நடந்தது. இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
மாநகராட்சியின் கூட்டத்தொடரை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சண்டிகர் மேயர் தேர்தல் நடந்ததை வைத்து பார்த்தால், ஜனநாயகம் கேலிக்கூத்து ஆக்கப்பட்டு உள்ளது எனக் சாடியது. மேலும் சண்டிகர் மாநகராட்சியின் கூட்டத்தொடரை காலவரையின்றி தள்ளி வைத்ததோடு, தேர்தல் நடத்திய அதிகாரி அனில் மசிஹ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமமன்றம் உத்தரவிட்டது.
நேரில் ஆஜரான தேர்தல் நடத்திய அதிகாரி அனில் மசிஹ்
இந்தநிலையில், நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நேரில் ஆஜரான தேர்தல் நடத்திய அதிகாரி அனில் மசிஹ்ஹிடம் தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்விகளை எழுப்பினார்.
மேலும் படிக்க - Arvind Kejriwal: என்னை பயங்கரவாதி போல் பாஜக நடத்துகிறார்கள் - அரவிந்த் கெஜ்ரிவால்
தலைமை நீதிபதி vs அனில் மசிஹ்
தலைமை நீதிபதி: வாக்குச் சீட்டில் குறியிடு செய்தீர்களா? எதற்கான செய்தீர்கள்?
அனில் மசிஹ்யின் வழக்கறிஞர்: வாக்குச் சீட்டுகள் தனித்தனியாக பிரிக்கப்பட வேண்டி இருந்ததால், நினைவில் வைத்துக்கொள்ள "எக்ஸ்" வடிவில் குறியிடு செய்தேன்.
தலைமை நீதிபதி: ஏன் கேமராவைப் பார்த்துக் கொண்டிருந்தார்?
அனில் மசிஹ்யின் வழக்கறிஞர்: சபையில் சலசலப்பு நிலவியதாகவும், கேமரா வேலை செய்கிறதா இல்லையா என்பதற்காக கேமராவைப் பார்ப்பது குற்றமல்ல என்றும் கூறினார்.
தலைமை நீதிபதி: வாக்குச்சீட்டு ஏன் செல்லாது என அறிவிக்கப்பட்டது?
அனில் மசிஹ்யின் வழக்கறிஞர்: வாக்குச் சீட்டில் கையெழுத்திட உரிமை உள்ளதாகவும், வாக்குச் சீட்டில் சிறிய புள்ளிகள் போன்ற குறிகள் இருந்ததால், சிலவற்றை மேலிருந்து மடித்து, அவை செல்லாது என அறிவிக்க கையொப்பமிட உரிமை உள்ளதாகவும் கூறினார். அது சரியாக இருக்கலாம் அல்லது தவறாக இருக்கலாம். அதை தான் அவர் செய்தார் என்றார்.
ஜனநாயகம் கேலிகூத்தாக்கப்பட்டு உள்ளது - உச்ச நீதிமன்றம் கண்டனம்
நேற்று (பிப்ரவரி 19, திங்கட்கிழமை) நடந்த விசாரணையின் போது, தேர்தல் அதிகாரி அனில் மாசிஹ் வாக்குச் சீட்டுகளை சிதைத்துள்ளார் என்பது உண்மை என தெரிந்ததால், அவர் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அவரது நடவடிக்கைகள் "ஜனநாயகத்தின் கொலை" மற்றும் "கேலி" என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
வாக்குச் சீட்டுகளில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அனில் மசிஹ், ஏற்கனவே சிதைக்கப்பட்ட எட்டு வாக்குச் சீட்டுகளில் தாம் எக்ஸ் குறியைப் போட்டதாகவும், ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் சலசலப்பை உருவாக்கி வாக்குச் சீட்டுகளைப் பறிக்க முயன்றதால், கேமரா சரியாக இயங்குகிறதா என்பதற்காகத்தான் கேமராவை பார்த்ததாகவும் கூறினார்.
மேலும் படிக்க - தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன? உச்சநீமன்றம் ரத்து செய்தது ஏன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ