சந்திரயான் 3: எல்லாம் தோல்வியடைந்தாலும் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் - எப்படி?
சந்திரயான்-3-ன் `விக்ரம்` லேண்டர் அதன் LHDAC கேமரா மூலம் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கு, அதில் ஏற்கனவே பிக்ஸ் செய்யப்பட்டிருக்கும் இடத்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஸ்கேன் செய்து தேடிக் கொண்டிருக்கிறது. அந்த ஏஐ தொழில்நுட்பம் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் பெரிய கற்கள் மற்றும் ஆழமான பள்ளங்கள் இல்லாத இடத்தைக் கண்டறிய உதவும்.
சந்திரயான்-3-ன் லேண்டர் 'விக்ரம்' இப்போது சந்திரனின் தென் துருவத்தில் பெரிய கற்கள் மற்றும் குழிகள் இல்லாத LHDAC கேமராவுடன் ஒரு இடத்தைத் தேடுகிறது. பாதுகாப்பான இடத்தை துல்லியமாக கண்டறியும்பட்சத்தில் புதன்கிழமை மாலை 6:04 மணிக்கு உறுதியாக நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கும். விக்ரம் லேண்டரில் உள்ள கேமரா அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து தடுக்கும் திறன் கொண்டது என்று இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. இந்த கேமராவில் ஏற்கனவே பிக்ஸ் செய்யப்பட்டிருக்கும் தரையிறங்கும் தளத்தை மேப்பிங் செய்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறது. அதில் எடுக்கப்பட்ட கருப்பு மற்றும் வெள்ளை படங்கள் பெரிய கற்கள் மற்றும் ஆழமான பள்ளங்கள் இல்லாத தரையிறங்கும் இடத்தைக் கண்டறிய உதவும். இந்த கேமராவின் உதவியுடன், விக்ரம் லேண்டர் நிலவில் இருக்கும் அனைத்து சவால்களையும் தரையிறங்குவதற்கு முன்கூட்டியே பார்க்க முடிகிறது.
மேலும் படிக்க | சந்திரயான்-3: விக்ரம் லேண்டர் அனுப்பிய புகைப்படங்களை பெருமையுடன் பகிர்ந்த இஸ்ரோ
விக்ரம் லேண்டரின் இந்த பணியை தான் உலகமே இப்போது உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் சந்திரயான் 3 தரையிறங்க்கூடிய பகுதி என்பது அதைப் பற்றிய தகவல்கள் மிக மிக குறைவாக இருக்கும் பகுதியாகும். அங்கு தான் சந்திரயான் 2 தரையிறக்கப்படும்போது தோல்வியை தழுவியது. இருப்பினும் அதில் இருக்கும் விண்கலத்தின் தொழில்நுட்பங்கள் இப்போதும் வேலை செய்து கொண்டிருக்கின்றன. அது கொடுக்கும் தகவல்கள் இப்போது சந்திரயான் 3 தரையிறங்குவதற்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது. சந்திரயான்-2 தரையிறங்கும் செயல்முறைக்குப் பிறகு நாம் பார்த்த தரவுகளின் அடிப்படையில் சந்திரயான்-3 பணி கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
தொழில்நுட்பத்தில் பல மாற்றங்களையும் புதுப்பிப்புகளையும் செய்துள்ளோம். எங்கெல்லாம் ஓரங்கள் குறைவாக இருக்கிறதோ, அந்த ஓரங்களை அதிகப்படுத்தினோம். சென்சார்களிலும் பெரிய மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சந்திரயான்-2 இலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில், சந்திரயான் 3 அதிக வலிமையுடன் முன்னேறி வருகிறது. சந்திரயான்-2 போலல்லாமல் இம்முறை அது வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் இறங்கும் என்று நம்புகிறோம் என சிவன் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டில், சந்திரயான்-2 விண்கலம் சந்திரனின் மேற்பரப்பைத் தொடவிருந்தபோது, அதன் விக்ரம் லேண்டர் விபத்துக்குள்ளானது. அப்போது இஸ்ரோ தலைவர் கே. சிவன் அழுது கொண்டிருந்தார். அப்போது பணியை பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடி அவரை ஊக்கப்படுத்தினார்.
தரையிறக்கம் எவ்வளவு சிக்கலானது?
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் பேசும்போது, சாஃப்ட் லேண்டிங் அதாவது 'டச் டவுன்' என்பது மிகவும் சிக்கலான செயல் என்று கூறினார். 2008-ல் சந்திரயான்-1 ஏவப்பட்டபோது இஸ்ரோவுக்கு தலைமை தாங்கிய நாயர், சந்திரயான்-2-ன் போது கடைசி இரண்டு கிலோமீட்டர் தூரத்தை அதாவது சந்திர மேற்பரப்புக்கு மேலே தவறவிட்டோம் என்று கூறினார். ஒன்றாக வேலை செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. த்ரஸ்டர்கள், சென்சார்கள், ஆல்டிமீட்டர்கள், கணினி மென்பொருள் மற்றும் அனைத்தும். எங்காவது ஏதாவது இடையூறு ஏற்பட்டால். நாம் சிரமப்படலாம். உண்மையாகவே நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். நிச்சயமாக, இஸ்ரோ போதுமான தயாரிப்புகளைச் செய்துள்ளது என்பதை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் நாம் நம் பக்கத்திலிருந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
'எல்லாம் தோல்வியடைந்தாலும் விக்ரம் இறங்குவார்'
இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் பேசும்போது, விக்ரம் தரையிறங்கும்போது, எல்லாமே தோல்வியுற்றால், எல்லா சென்சார்களும் தோல்வியுற்றால், எதுவும் வேலை செய்யாது என்ற சூழல் வரும்போது விக்ரம் லேண்டர் நிச்சயம் தரையிறங்கும் என்று கூறியுள்ளார். அதற்கேற்ப அல்காரிதம்கள் சரியாக வேலை செய்யும் என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த முறை விக்ரமின் இரண்டு என்ஜின்கள் செயலிழந்தாலும், அது தரையிறங்க முடியும் என்பதையும் நாங்கள் உறுதி செய்துள்ளோம். விக்ரம் லேண்டர் பிரக்யான் ரோவரை சுமந்து செல்கிறது. இது சந்திர மேற்பரப்பில் இருந்து தரவுகளை சேகரிக்கும். ஒட்டுமொத்தமாக, இது வெற்றிகரமான சாஃப்ட் லேண்டிங் என்றும், இஸ்ரோவின் எதிர்கால பணிகளுக்கு ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ