சந்திரயான்-3: விக்ரம் லேண்டர் அனுப்பிய புகைப்படங்களை பெருமையுடன் பகிர்ந்த இஸ்ரோ

Chandrayan-3: இந்தியா அடையவுள்ள வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்காக, அந்த தருணத்திற்காக உலகமே ஆவலுடன் காத்திருக்கின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 22, 2023, 04:24 PM IST
  • சந்திரயான்-3- இன் வெற்றிகரமான இரண்டாவது டீபூஸ்டிங் ஞாயிறு காலை நடைபெற்றது.
  • இதன் மூலம் லேண்டர் நிலவை நோக்கி இன்னும் நெருக்கமாக நகர்ந்துள்ளது.
  • இந்த செயல்முறை அதன் லட்சிய மென்மையான தரையிறக்கத்திற்கான (சாஃப்ட் லேண்டிங்க்) கவுண்ட்டவுனின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
சந்திரயான்-3: விக்ரம் லேண்டர் அனுப்பிய புகைப்படங்களை பெருமையுடன் பகிர்ந்த இஸ்ரோ title=

சந்திரயான்-3 சமீபத்திய புதுப்பிப்பு: நிலவை நோக்கிய இந்தியாவின் பயணம் இன்னும் சில மணி நேரங்களில் நிறைவடையவுள்ளது. இந்தியா அடையவுள்ள வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்காக, அந்த தருணத்திற்காக உலகமே ஆவலுடன் காத்திருக்கின்றது. இந்த நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்-3 மிஷனின் லேண்டர் தொகுதியின் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக குறைத்துள்ளது. சந்திரயான்-3 -இன் விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவின் மேற்பரப்பை வெற்றிகரமாக தொட்டு வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆகஸ்ட் 23, 2023, ஞாயிற்றுக்கிழமை சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) அறிவித்துள்ளது. "சந்திரயான்-3 இன் மென்மையான தரையிறக்கம் இந்திய வரலாற்றில் ஒரு அற்புதமான தருணமாக இருக்கும். இது அனைவரிடமும் ஆர்வத்தைத் தூண்டுவது மட்டுமல்லாமல், நமது இளைஞர்களின் மனதில் விண்வெளி ஆய்வுக்கான ஆர்வத்தையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது" என்று இஸ்ரோ தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பதிவில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் சந்திராயன் 3 அனுப்பிய நிலவின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது. நாளை மறுநாள் மாலை லேண்டல் விக்ரம் நிலவில் தரை இறங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சந்திரயான்-3: டீபூஸ்டிங் வெற்றி.. நிலவை நெருங்கியது லேண்டர்.. தரையிறங்க இன்னும் ஒரு படிதான்

ஞாயிற்றுக்கிழமை லேண்டரின் இரண்டாவது மற்றும் இறுதி டீபூஸ்டிங் செயல்முறை வெற்றிகரமாக முடிந்தது. இதன் பிறகு சந்திரயானின் லேண்டர் விக்ரம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கும் பாதையில் ஒரு முக்கிய இடத்தை நாம் கடந்துள்ளோம். லேண்டர் இப்போது உள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டும். பின்னர், இறுதி தரையிறக்க முயற்சிக்கு முன் நியமிக்கப்பட்ட தரையிறங்கும் தளத்தில் சூரிய உதயத்திற்காக பின் லேண்டர் காத்திருக்கும்.

இரண்டாவது டீபூஸ்டிங்

சந்திரயான்-3- இன் வெற்றிகரமான இரண்டாவது டீபூஸ்டிங் ஞாயிறு காலை நடைபெற்றது. இதன் மூலம் லேண்டர் நிலவை நோக்கி இன்னும் நெருக்கமாக நகர்ந்துள்ளது. இந்த செயல்முறை அதன் லட்சிய மென்மையான தரையிறக்கத்திற்கான (சாஃப்ட் லேண்டிங்க்) கவுண்ட்டவுனின் தொடக்கத்தைக் குறிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை, லேண்டர் மாட்யூலின் (எல்எம்) சுற்றுப்பாதை வெற்றிகரமாக குறைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது. இது, ஆகஸ்ட் 23 புதன்கிழமை மாலை 6 மணியளவில் நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறங்கும் முயற்சிக்கு களம் அமைத்தது. 

முதல் டீபூஸ்டிங்

முன்னதாக ஆக்ஸ்ட் 18 ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 இன் முதல் டீபூஸ்டிங் செயல்முறையை வெற்றிகரமாக செய்து முடித்தது. சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள உந்துவிசைக் கலனில் இருந்து, தனியாக பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் நிலவை சுற்றிவரும் நிலையில், மாலை சுமார் 4 மணி அளவில், அதன் சுற்றுப்பாதையின் உயரம் குறைக்கப்பட்டது. இதன் மூலம் விக்ரம் லெண்டர் நிலவுக்கு இன்னும் அருகில் சென்றது. முதல் டீபூஸ்டிங்கிற்கு பிறகு நிலவுக்கு நெருக்கமான சுற்றுப்பாதையில் அதன் பயணம் துவங்கியது.  தொடர்கிறது. 

சந்திரயான் மிஷன்

சந்திரயான்-3 என்பது சந்திரயான்-2-க்கு தொடர்ச்சியான ஒரு செயல்திட்டமாகும். சந்திரயான் செயல்திட்டம், நிலவில் ஒரு விண்கலத்தை தரையிறக்குவதையும் நிலவின் மேற்பரப்பை ஆராய்வதற்காக ஒரு ரோவரை அங்கு நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிலவின் கலவை மற்றும் புவியியல் பற்றிய தரவுகளை ரோவர் சேகரிக்கும். இது நமது பூமிக்கு அருகில் உள்ள புதிரான நிலவின் வரலாறு மற்றும் பரிணாம வளர்ச்சி பற்றிய விலைமதிப்பற்ற நுண்ணறிவுகளை விஞ்ஞானிகளுக்கு வழங்கும்.

இந்த பணியானது இந்தியாவின் விண்வெளி ஆய்வு முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிக்கிறது. இதன் மூலம் நிலவுக்கு வெற்றிகரமான செயல்திட்டங்களை மேற்கொண்டுள்ள அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் பெருமையுடன் சேர்ந்துள்ளது. 

மேலும் படிக்க | சந்திரயான்-3: தொடங்கியது இறுதி ஓவர்... வரலாறு படைக்க போகும் லேண்டர்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News