மும்பை: 2014 மக்களவை தேர்தல் விட 2019 மக்களவை தேர்தலில் போட்டியிடுவது எங்களுக்கு எளிதாக உள்ளது. 2014 ஆம் ஆண்டு வெற்றியை காட்டிலும் 2019 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரிய வெற்றி பெரும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபத்னாவிஸ் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜீ நியூஸ்(ZEE News) தொலைக்காட்சியுடன் நடந்த சிறப்பு நேர்காணலில் பேசிய மகாராஷ்டிரா முதலமைச்சர் கூறியதாவது:-


பிரதமர் நரேந்திர மோடி ஒரு பாகுபலி என்று, அவரது தலைமை கீழ் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறுவது நிச்சயம். இந்த முறை, மகாராஷ்டிராவில் அதிக இடங்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லும். மகாராஷ்டிராவில் பிரதமர் மோடிக்கு பின்னால் பெரிய கூட்டம் கூடி வருகிறது. பொதுமக்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். 


முப்பது ஆண்டுகளாக சிவசேனா - பிஜேபி ஒன்றாக செயல்பட்டு வருகிறோம். கடந்த மூன்று ஆண்டுகளாக இரண்டு கட்சிக்கும் இடையே கசப்பான நிலை இருந்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எங்களை பற்றி கூறினால், நாங்களும் அதற்கு எதிர்வினை தெரிவித்தோம். ஆனால் இப்போது எல்லாம் எந்தவித கசப்பும் இல்லை. இரண்டு கட்சிகளுக்கான உறவு நன்றாக இருக்கிறது. சிவசேனா - பிஜேபி இடையே தூரம் ஏற்பட்டது. இன்று நாங்கள் ஒன்றாக இருக்கிறோம், இரண்டு கட்சிகளும் சகோதரர்களாக சேர்ந்து செயல்படுகிறோம்.


ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்வான சேனா (எம்என்எஸ்) கட்சி அனைத்துத் தேர்தல்களிலும் தோல்வியடைந்துள்ளது. பிரதமர் மோடியால் தங்கள் அரசியல் கட்சிக்கு மூடுவிழா வந்துவிட்டது என்ற வலி ராஜ் தாக்கரேயின் மனதில் இருக்கிறது என முதல்வர் பத்னாவிஸ் கூறினார்.