அருணாச்சலத்தில் காணாமல் போன 5 இந்தியர்களை சீனா இந்தியாவிடம் ஒப்படைத்தது..!!!
சீன இராணுவத்தால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் நபர்கள் டோச் சிங்கம், பிரசாட் ரிங்லிங், டோங்டு எபியா, தனு பேக்கர் மற்றும் நகரு டிரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் இருந்து காணாமல் போன ஐந்து இளைஞர்களை சீன விடுதலை இராணுவம் (PLA) சனிக்கிழமை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக வெள்ளிக்கிழமை, மத்திய அமைச்சர் கிரேன் ரிஜிஜு, அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களை, இந்தியாவிடம் ஒப்படைப்பதாக சீன ராணுவம், இந்திய ராணுவத்திடம் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்திருந்தார். "ஒப்படைப்பது நாளை எப்போது வேண்டுமானாலும் நடைபெறும், அதாவது செப்டம்பர் 12, 2020 அன்று ஒப்ப்டைக்கப்படுவார்கள் என", அவர் ட்விட்டரில் எழுதியிருந்தார்.
இளைஞர்கள் குழுவாக காட்டுக்கு வேட்டையாட சென்றனர். அப்போது அதிலிருந்து திரும்பி வந்த இருவர், தஙக்ள் குழுவில் இருந்த ஐந்து இளைஞர்களை சீன ராணுவம் கடத்தி சென்றதாக தெரிவித்தனர். அவர்கள் சென்ற காட்டு பகுதியில் இருந்து, 12 கிலோமீட்டர் தொலைவில் சீன ராணுவம் ரோந்து பணி மேற்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அருணாச்சல பிரதேசத்தில் பிரச்சனையை கிளப்பும் சீனா; பல கிராமங்கள் காலி செய்யப்பட்டன!!
சீன இராணுவத்தால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் நபர்கள் டோச் சிங்கம், பிரசாட் ரிங்லிங், டோங்டு எபியா, தனு பேக்கர் மற்றும் நகரு டிரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திங்களன்று, சீனா ஐந்து இளைஞர்கள் இருக்கும் இடத்தைப் பற்றி இந்தியா கேள்வி எழுப்பிய போது, அருணாச்சல பிரதேசத்தை நாங்கள் இந்தியாவின் பகுதியாக ஒருபோதும் நாங்கள் கருதவில்லை என்று கூறியதோடு, அருணாசல பிரதேசம் தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று அது கூறுகிறது.
காணாமல் போன் இளைஞர்கள் குறித்த எந்த தகவலும் இல்லை என சீனா முதலில் மறுத்தது.
கிழக்கு லடாக்கில் சீனாவுடனான பதட்டமான எல்லை நிலைமையைக் கருத்தில் கொண்டு, இந்திய இராணுவம் எல்.ஏ.சி பகுதியில், தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தி வரும் நேரத்தில் இளைஞர்கள் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தது.
ALSO READ | சீனாவின் முகத்திரை கிழிந்தது...ஈட்டிகளை ஏந்திய சீன படையினர் புகைப்படம் வெளியீடு..!!
முன்னதாக மார்ச் மாதம், 21 வயதான ஒருவர் பி.எல்.ஏ., அசபிலா செக்டாரில் உள்ள மக்மஹோன் கோடு அருகே கடத்திச் செல்லப்பட்டார். அவரது இரண்டு நண்பர்கள் தப்பித்து விட்டனர். ஆனால், டோக்லி சிங்கம் என்பவர் துப்பாக்கி முனையில் கடத்தி செல்லப்பட்டார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். சிறைபிடிக்கப்பட்ட 19 நாட்களுக்குப் பிறகு அவரை சீன இராணுவம் விடுவித்தது.
அதேசமயம், இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவிய போதிலும், செப்டெம்பர் மூன்றாம் தேதி, வடக்கு சிக்கிமில் ஒரு எல்லைப் பகுதியில் 17,500 அடி உயரத்தில் கடும் குளிரில், வழி இழந்த மூன்று சீன குடிமக்களுக்கு இந்திய இராணுவம் உணவு, சூடான உடைகள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கியது.
அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள், அவர்களுக்கு சீனா திரும்பி செல்ல வழிகாட்டி உதவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | லடாக் எல்லையில் நீடிக்கும் பதற்றம்... தொடர்ந்து அத்து மீறும் சீனா..!!!