Corona Virus உருவானதே இந்தியாவில்தான்: சீனா கூறும் அடுத்த கதை
கொரோனா வைரஸ் வுஹானில் தோன்றியதை மறைக்க சீனா மற்ற நாடுகளை நோக்கி கையை நீட்டுவது இது முதல் முறை அல்ல.
கொரோனா வைரஸால் உலகமே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வைரசின் தீவிரம் மீண்டும் அதிகமாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், வைரஸ் உருவான இடம் பற்றி சீனா மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வுஹானில் COVID-19 தொற்று பரவுவதற்கு முன்னர், இந்த தொற்று இத்தாலி உட்பட உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியதாக சீன அரசாங்கம் சமீபத்தில் கூறியது.
லடாக்கில் (Ladakh) தொடர்ந்து பதற்றம் நிலவுகின்ற நிலையில், கொரோனா வைரஸ் இந்தியாவில் இருந்து உலகிற்கு முதன்முறையாக பரவியதாக இப்போது சீன விஞ்ஞானி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவில் 2019 கோடையில் பிறந்தது கொரோனா-சீனா
சீன அறிவியல் அகாடமியின் விஞ்ஞானிகள் குழு, கொரோனா வைரஸ் இந்தியாவில் 2019 கோடையில் தோன்றியிருக்கலாம் என்று கூறியது. இந்த சீன குழு கொரோனா வைரஸ் விலங்குகளால் அசுத்தம் செய்யப்பட்ட நீர் மூலம் மனிதர்களுக்குள் நுழைந்தது என்று கூறியது. கொரோனா வைரஸ் இந்தியாவிலிருந்து வுஹானை (Wuhan) அடைந்தது என்றும் அங்கு அது அடையாளம் காணப்பட்டது என்றும் சீன நிபுணர்கள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸின் மூலத்தை தீர்மானிக்க சீன குழு பைலோஜெனடிக் பகுப்பாய்வை (கொரோனா வைரஸ் பிறழ்வு பற்றிய ஆய்வு) பயன்படுத்தியது.
வுஹானில் காணப்பட்ட கொரோனா வைரஸ் உண்மையான வைரஸ் அல்ல
வுஹானில் காணப்பட்ட கொரோனா வைரஸ் ஒரு உண்மையான வைரஸ் அல்ல என்று சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். விசாரணையில் பங்களாதேஷ், அமெரிக்கா, கிரீஸ், ஆஸ்திரேலியா, இந்தியா, இத்தாலி, செக் குடியரசு, ரஷ்யா அல்லது செர்பியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் தோன்றியதற்கான அறிகுறிகள் தெரியவந்துள்ளதாக அவர்கள் கூறினர். இந்தியா மற்றும் பங்களாதேஷில் பலவீனமான பிறழ்வு மாதிரிகள் காணப்படுவதால், அங்கு முதல் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சீன ஆராய்ச்சியாளர்கள் வாதிட்டனர்.
ALSO READ: Corona Vaccine-க்கான முழு செலவையும் மோடி அரசாங்கமே ஏற்கவுள்ளதா
கொரோனா வைரஸ் இந்தியாவில் பல மாதங்களாக பரவுவியிருக்கலாம்
சீன விஞ்ஞானிகள் கூறுகையில், “தண்ணீர் இல்லாததால், குரங்குகள் போன்ற காட்டு விலங்குகள் பெரும்பாலும் தண்ணீருக்காக கடுமையாக போராடுகின்றன. இது நிச்சயமாக மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான தொடர்பு அபாயத்தை அதிகரிக்கும். விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் (Corona Virus) பரவுவது அசாதாரண வெப்பத்தால் என்று நாங்கள் கருதுகிறோம்.” என்றனர். சீன விஞ்ஞானிகள் இந்தியாவின் மோசமான சுகாதார அமைப்பு மற்றும் இளம் மக்கள் தொகை காரணமாக, இந்த நோய் பல மாதங்களாக கண்டறியப்படாமல் தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
சீன விஞ்ஞானிகளின் கூற்றை யாரும் நம்பவில்லை
இதற்கிடையில், சீன விஞ்ஞானிகளின் இந்த தவறான கூற்று மற்ற விஞ்ஞானிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர் டேவிட் ராபர்ட்சன் டெய்லி மெயிலிடம் சீன ஆராய்ச்சி அதிக குறைபாடுகளைக் கொண்டுள்ளது என்றும் கொரோனா வைரஸ் குறித்த நமது புரிதலை சிறிதும் மேம்படுத்தவில்லை என்றும் கூறினார். கொரோனா வைரஸ் வுஹானில் தோன்றியதை மறைக்க சீனா (China) மற்ற நாடுகளை நோக்கி கையை நீட்டுவது இது முதல் முறை அல்ல.
இதற்கிடையில், உலக சுகாதார நிறுவனம் (WHO) தற்போது சீனாவில் கொரோனா வைரஸின் மூலத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கிறது. கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றியதாக WHO சான்றுகள் காட்டுகின்றன. WHO தனது விசாரணைக் குழுவை சீனாவுக்கு அனுப்பியது.
ALSO READ: ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடையும் COVID Vaccine: திட்டத்துடன் தயாராகிறது அரசு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR