புதுடில்லி: இந்தியா-சீனா எல்லை தகராறுக்கு மத்தியில் ஒரு பெரிய செய்தி வெளிவந்துள்ளது. சீன ஊடகங்களின்படி, 20 தற்காப்பு கலை பயிற்சியாளர்களை (China Martial Arts) திபெத்துக்கு சீனா அனுப்புகிறது. ஜூன் 15 க்கு முன்பே, சீனா தற்காப்பு கலை வீரர்களை திபெத்துக்கு அனுப்பியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எவ்வாறாயினும், நமது இந்திய இராணுவத்தின் கமாண்டோக்கள் ஏற்கனவே தயார் நிலையில் இருக்கிறார்கள். இராணுவத்தின் ஒவ்வொரு பிரிவிலும் கமாண்டோக்கள் (Ghatak Platoon) உள்ளனர், அவர்கள் ஆயுதங்கள் மற்றும் ஆயுதங்கள் இல்லாமலும் போராடுவதில் திறமையானவர்கள்.


சீனா (China) தனது தற்காப்பு கலை பயிற்சியாளர்களை அனுப்புவது மூலம், இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுக்க முயற்சிக்கக்கூடும், ஆனால் நமது கமாண்டோக்கள் ஏற்கனவே இந்திய ராணுவத்தால் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்திய இராணுவத்தின் (Indian Army) கமாண்டோக்கள் ஆயுதங்கள் இல்லாமல் போராடுவதில் திறமையானவர்கள் மற்றும் போரில் நேருக்கு நேர் எதிரிகளை தாக்கும் வல்லமை கொண்டவர்கள்.



ஜூன் 15 அன்று நடந்த வன்முறை மோதலுக்கு முன்பே, திபெத்தின் உள்ளூர் தற்காப்புக் கலை கிளப்பில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட போராளிகளை சீனா இராணுவப் பிரிவுக்கு அனுப்பியது. இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையிலான 1996 ஒப்பந்தத்தின்படி, எல்.ஏ.சியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் எந்த துப்பாக்கிச் சூடும் நடத்தக்கூடாது மற்றும் ஆபத்தான இரசாயன ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடிப்புகள் எதுவும் இருநாடுகளும் அனுமதிக்கக் கூடாது என்று கையெழுத்து போடப்பட்டு உள்ளது. எனவே ஆயுதங்கள் இங்கு பயன்படுத்தப்படுவதில்லை. ஜூன் 15 அன்று நடந்த மோதலின் போது, ​​யாரும் இரு தரப்பிலிருந்தும் ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை.