கால்வன் பள்ளத்தாக்குக்குப் பிறகு இந்தியாவின் மற்றொரு பிராந்தியத்தை குறிவைக்கும் சீனா

கால்வன் பள்ளத்தாக்கு மோதலை அடுத்து, சீனா இப்போது தனது படைகளை LAC அருகில் உள்ள டெப்சாங்கில் சீனா தனது நிலையை வலுப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 25, 2020, 08:36 PM IST
  • கால்வன் பள்ளத்தாக்கில் மோதலுக்குப் பின்னர், சீனா இப்போது தனது படைகளை டெப்சாங்கில் வலுப்படுத்துகிறது.
  • சீன நடவடிக்கைகளை கண்காணிக்கும் திறனை இந்தியா அதிகரித்துள்ளது.
  • கால்வான் பள்ளத்தாக்கில் ஒரு பாலத்தை வெறும் 72 மணி நேரத்தில் கட்ட முடிந்தது.
கால்வன் பள்ளத்தாக்குக்குப் பிறகு இந்தியாவின் மற்றொரு பிராந்தியத்தை குறிவைக்கும் சீனா title=

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் (Ladakh) உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் (Galwan Valley) இந்திய இராணுவத்துடன் வன்முறை மோதலுக்குப் பின்னர், சீனா இப்போது தனது படைகளை டெப்சாங்கில் உள்ள எல்.ஏ.சி. எல்லையில் சீனா (China) தனது நிலையை வலுப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்தியா ஏற்கனவே டி.எஸ்.டி.பி.ஓ சாலையின் கட்டுமானத்தை முடித்துவிட்டது. மேலும் எல்.ஏ.சி ட்ரூபூக்கிலிருந்து டி.பி.ஓ வரை ஒரு சாலையை உருவாக்கும் இந்தியாவின் முயற்சியால், சீனாவுக்கு பெரும் சிக்கள் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது இப்போது சீன-இந்தியா எல்லையில் (Sino-India border) பல சாலைகளை இந்தியா திறக்கிறது. இதன்மூலம் தவுலத் பேக்  ஓல்டி (Daulat Beg Oldie) பகுதியில் இருந்து சீன நடவடிக்கைகளை கண்காணிக்கும் திறனை இந்தியா அதிகரித்துள்ளது.

இந்த செய்தியும் படிக்கவும் | சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை மேம்படுத்திய ராஜீவ் காந்தி

எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து ஜீ நியூஸிடம் பேசிய வீர் சக்ரா விருது பெற்ற ஓய்வு பெற்ற கேப்டன் தாஷி, கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா ஒரு பாலத்தை கட்ட முடியும் என்று சீனா ஒருபோதும் எதிர் பார்க்கவில்லை என்று கூறினார். எல்.ஏ.சி (Line of Actual Control) மீதான அதன் நடவடிக்கைக்கு இந்தியா ஒரு பொருத்தமான பதிலை அளிக்கும் என்று சீனாவும் மதிப்பிடத் தவறிவிட்டது: என்று அவர் கூறினார்.

இந்திய இராணுவம் சமீபத்தில் கால்வான் பள்ளத்தாக்கில் (Galwan Valley) ஒரு பாலத்தை வெறும் 72 மணி நேரத்தில் கட்ட முடிந்தது. இந்த நடவடிக்கையை சீனா தடுக்க முயன்றது. ஆனால் இந்தியா முன்னேற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. தவுலத் பேக்  ஓல்டி (DBO) பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கை மூலமாக, இங்கிருந்து சீன பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு செயலையும் கண்காணிக்க முடியும்.

இந்த செய்தியும் படிக்கவும் | இந்தியா மீது சைபர் தாக்குதல் நடத்த சதி செய்கிறதா சீனா?

எவ்வாறாயினும், எல்.ஏ.சி-யில் தனது பகுதியை பாதுகாக்க இந்திய இராணுவம் (Indian Army) முழுமையாக தயாராக உள்ளது. சீனாவில் எந்தவொரு தவறான முயற்சியை முறியடிக்கும் நோக்கில், டிபிஓவிலிருந்து கால்வன் பள்ளத்தாக்கு, பியோங்யாங் மற்றும் டெம்சாக் (Depsang) வரை இந்திய இராணுவம் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது.

அதேநேரத்தில், லடாக்கின் எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த மத்திய அரசாங்கம் இன்று முடிவு செய்தது. லடாக்கில் 54 மொபைல் கோபுரங்களுடன் எல்.ஏ.சி அருகே டெம்சக்கில் ஒரு மொபைல் கோபுரம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஆதாரங்களின்படி, நுப்ரா பிராந்தியத்தில் 7 மொபைல் டவர், லேவுக்கு 17 மொபைல் டவர், ஜான்ஸ்கருக்கு 11 மொபைல் டவர், கார்கிலில் 19 மொபைல் டவர் அமைக்கப்படும். 

Trending News