புதுடெல்லி: லடாக்கில் (Ladakh) தற்போது உள்ள நிலைமையை வைத்துப் பார்க்கும்போது, அங்கு பதற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது. சீனாவின் தன்மை மற்றும் வினோதங்களைப் பார்த்து, இந்திய இராணுவம் (Indian Army) இந்திய சீன எல்லைப் பகுதியான எல்.ஏ.சி-யில் (LAC) தனது ஏற்பாடுகளை அதிகரித்துள்ளது. கிழக்கு லடாக்கில் பீரங்கிகளின் வரிசைப்படுத்தல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்திய ராணுவத்தின் வடக்கு கமாண்டின் தலைவரான லெப்டினென்ட் ஜெனரல் ஒய்.கே.ஜோஷி டெல்லியை அடைந்தார். பாங்கொங்கில் (Pangong) ஃபிங்கர் -4 -ரிலிருந்து சீன இராணுவம் (Chinese Army) பின்வாங்க மறுத்துவிட்டதால் நிலைமை மோசமடைந்து வருவதற்கான அறிகுறிகள் உள்ளன. எல்.ஏ.சி –யில் பதற்றத்திற்கு மத்தியில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh), நாளை முதல் லடாக் பயணத்தைத் துவக்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

LAC-ல் பதற்றம் நீண்ட காலம் நீடிக்கக்கூடும்


சீனாவின் இராணுவம் பேங்கோங்கில் பின்வாங்கத் தயாராக இல்லை. ஃபிங்கர் -4 (Finger-4) இலிருந்து விலகிச் செல்லவும் சீன இராணுவம் தயாராக இல்லை. சுஷூலில் இரு நாடுகளுக்கும் இடையே நான்காவது முக்கிய தளபதி நிலை பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை, 14 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. கால்வன், ஹாட்ஸ்பிரிங்ஸ் மற்றும் கோக்ராவிலிருந்து துருப்புக்களை திரும்பப் பெற ஒப்புக்கொள்ளப்பட்டது. சீன துருப்புக்கள் இப்பகுதியில் இருந்து முழுமையாக விலக வேண்டும் என்று இந்தியா கோருகிறது.


ALSO READ: நேபாளத்தில் வலுவாக கால் ஊன்ற சீன கடைபிடித்த தந்திரம் என்ன…!!!


இந்தியா ராணுவம் எச்சரிக்கை நிலையில்


இந்திய ராணுவமும் எந்த நிலைமையையும் சமாளிக்க முழுமையாக தயாராக உள்ளது. சீனாவின் தந்திர செயல்களை மனதில் கொண்டு, கிழக்கு லடாக்கில் 60 ஆயிரம் வீரர்களை இந்தியா நிறுத்தியுள்ளது. இந்தியா, பீஷ்மா டேங்கிகள், அப்பாச்சி போர் ஹெலிகாப்டர், சுகோய் போர் விமானம், ஷினூக் மற்றும் 'ருத்ரா' போர் ஹெலிகாப்டர் ஆகியவற்றை நிறுத்தியுள்ளது. கிழக்கு லடாக்கில் முன்பை வித அதிக அளவிலான பீரங்கிகளை இந்தியா தயார் நிலையில் வைத்துள்ளது.


ALSO READ: நமக்குள்ள சண்டை எதுக்கு.. பேசி தீர்க்கலாம் வாங்க…….தூது விடுகிறது சீனா..!!!