குடியுரிமை திருத்தம் மசோதா இந்திய அரசியலமைப்பு வரலாற்றில் `கருப்பு தினம்`: சோனியா
குடியுரிமை திருத்தம் மசோதா இந்திய அரசியலமைப்பு வரலாற்றில் `இருண்ட நாள்` என்பதைக் குறிக்கிறத என காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்!!
குடியுரிமை திருத்தம் மசோதா இந்திய அரசியலமைப்பு வரலாற்றில் 'இருண்ட நாள்' என்பதைக் குறிக்கிறத என காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்!!
டெல்லி: அரசியல் அமைப்புச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள, சமத்துவம், பாகுபாடு இன்மை போன்றவற்றிக்கு எதிராக, திருத்தப்பட்ட குடியுரிமைச்சட்டம் இருப்பதாக கூறியுள்ளார். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை நாடே கொண்டாடும் நிலையில், மத்திய அரசு மக்களை பிரித்தாளும் இது போன்ற சட்டங்களை இயற்றுவதாகவும், குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நாள், கறுப்பு தினம் என, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில், 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தில் உள்ள நிபந்தனைகளை குறைக்கும் வகையில், கடந்த 2016ஆம் ஆண்டு, மத்திய பாஜக அரசு கொண்டுவந்த திருத்தங்களை, மாநிலங்களவை நிராகரித்ததால், அது நிறைவேற்றப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சி செய்து வரும் மத்திய பாஜக அரசு, நடப்பு நாடாளுமன்ற தொடரில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை, கடந்த திங்கட்கிழமை மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதற்க்கு பலரும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதை எதிர்த்து பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்றத்தில், குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நாள், கறுப்பு தினம் என, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... ''இந்த நாள் இந்திய அரசியலமைப்பு வரலாற்றின் கருப்பு நாளாகும். இந்தியாவின் பண்முகத்தன்மையில் நம்பிக்கையில்லாத குறுகிய எண்ணம் கொண்ட சக்திவாய்ந்தவர்களுக்கே இந்த மசோதா நிறைவேறியது வெற்றியாக கருதப்படும். இந்திய நாட்டின் அடிப்படை கொள்கைகளுக்கே இந்த மசோதா சவால் விடுகிறது.
நம் நாடு ஒரு சிலரின் பாதுகாப்பின்மையால் ஒருபோதும் உடைக்கப்படாத பெருமையுடன் உள்ளது. சுதந்திரமான இந்தியா என்பது இங்குள்ள மக்கள் சுதந்திரமாக வாழ்ந்து அவர்களது குரல்கள் கேட்கப்பட்டு நமது அரசியல் சக்திகளும், நமது அராசாங்கங்களும் இந்த நாட்டின் குடிமக்களின் மாற்றியமைக்க முடியாத உரிமைகளைப் பாதுகாக்க தங்களை அற்பணிக்க வேண்டும் என்ற அறிவாற்றலில் நாங்கள் எப்போதும் நிலையாக உள்ளோம்’’ என தெரிவித்துள்ளார்.