மேக வெடிப்பு நிகழ்ந்ததற்கு வெளிநாட்டு சதிதான் காரணம் - முதலமைச்சர் சந்திரசேகர ராவ்
தெலங்கானாவில் நிகழ்ந்த மேக வெடிப்புக்கு வெளிநாடுகளின் சதிதான் காரணமென்று அம்மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் உட்பட அனைத்து மாவட்டங்களிலிலும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்கிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. பல அணைகள் நிரம்பியதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். கனமழை காரணமாக அம்மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படுமென்று அம்மாநிலத்தின் கல்வித் துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி கூறியுள்ளார்.
மேலும் படிக்க | குடியரசுத் தலைவர் தேர்தலில் பயன்படுத்தப்படும் ‘அழிக்க’ முடியாத சிறப்பு ‘MARKER PEN’
இந்தச் சூழலில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக பத்ராசலம் என்ற ஊர் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பத்ராசலம் ஊரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பார்வையிட்டார். இதனையடுத்து உடனடி நிவாரண பணிகளுக்காக, பூபாலப்பள்ளி, மகபூபாபாத் உள்ளிட்ட மாவட்டங்களுக்கென 1 கோடி ரூபாயை ஒதுக்கினார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 10,000 ரூபாயும், 20 கிலோ அரிசியும் வழங்க உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தெலங்கானாவில் ஏற்பட்டிருக்கும் மேக வெடிப்பு புதிதாக உள்ளது. வெளிநாடுகளின் சதியாகக்கூட இந்த நிகழ்வு இருக்கலாம் என்ற செய்தியும் எங்களுக்கு வருகிறது. இதற்கு முன்னர் உத்தரகாண்ட்டிலும், காஷ்மீரிலும் இப்படி நடந்திருக்கிறது. இப்போது தெலங்கானாவில் நடக்கிறது” என்றார்.
மேலும் படிக்க | Price Hike: அத்தியாவசியமான பொருட்களுக்கான விலைகள் உயர்ந்தன: மாவு விலை உயர்வு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிறகு கோதாவரி ஆற்றில் சாஅந்தி பூஜை செய்த பிறகு எதுர்நகரத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, இம்மாதத்தின் இறுதிவரை கனமழை தொடருமென்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக முன்னெடுக்க வேண்டுமென்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ