புது டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைநகரில் இலவச வைஃபை திட்டத்தைத் தொடங்க ஒரு மோசமான நாளைத் தேர்ந்தெடுத்துள்ளார். அதாவது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இணைய சேவைகள் இன்று பிராந்தியத்தின் சில பகுதிகளில் முடக்கப்பட்டன. அந்த நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இலவச வைபை ஹாட்ஸ்பாட் திட்டத்தை டெல்லி ஐ.டி.ஓ பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அரவிந்த் கேஜரிவால், "நாங்கள் இலவச வைபை ஹாட்ஸ்பாட் திட்டத்தை தொடங்கிய அதே நாளில், நகரத்தில் இணைய சேவைகள் முடக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலைமை விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்கிறார்.


 



இந்த சட்டம் சிலருக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்களில் 70 சதவீதம் பேர் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க ஆவணங்கள் இல்லாததால் மக்கள் "பயப்படுகிறார்கள்" என்று அவர் கூறினார். மேலும் பேசிய திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் தேவை இங்கு இல்லை. இளைஞர்களுக்கு வேலை வழங்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.


 



புதிதாக அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்கள், குறிப்பாக அசாம், டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகள் வன்முறை சீற்றத்தைக் கண்டுள்ளன.


அந்தவகையில் டெல்லியில் மொபைல் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் போராட்டம் நடைபெறும் இடங்களில் ஏர்டெல், ஜியோ, எம்டிஎன்எல், பி.எஸ்.என்.எல் மற்றும் வோடபோன், ஐடியா என அனைத்து தகவல் தொடர்பு சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.