அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு: பணவீக்கத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் சாமானிய மக்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி மற்றொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. இப்போது மக்கள் அத்தியாவசிய மருந்துகள் வாங்க அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். ஏப்ரல் 1 முதல், வலி ​​நிவாரணி, ஆன்டிபயாடிக் உள்ளிட்ட பல அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிகரிக்கப் போகிறது (Essential Medicines Price Hike). ஆண்டு மொத்த விற்பனை விலைக் குறியீட்டில் (WPI) மாற்றத்திற்கு ஏற்ப மருந்து நிறுவனங்கள் விலையை உயர்த்தக் கூடும். மொத்த விற்பனை விலைக் குறியீடு அதிகைத்துள்ளதன் காரணமாக ,  அத்தியாவசிய மருந்துகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள 1,000 க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலைகள் அதிகரிக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணவீக்கத்துடன் போராடும் சாமானிய மக்களுக்கு இது தாக்கத்தை ஏற்படுத்தும்.  ஏனெனில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட வருடாந்திர மொத்த விற்பனை விலைக் குறியீட்டில் (WPI) ஆண்டு மாற்றம் 12.12 ஆக அதிகரிக்கும் என்று மருந்து விலைக் கட்டுப்பாட்டாளர் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. 2022 ம் ஆண்டின் அடிப்படையில் சதவிகிதத்தை அதிகரிக்கலாம். பணவீக்கம் அதிகரித்து வருவதால், மருந்து நிறுவனங்கள் மருந்துகளின் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன.


தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் (NLEM) பட்டியலிடப்பட்டுள்ள மருந்துகளின் விலை ஆண்டுதோறும் உயர்த்தப்படுவது WPIயின் அடிப்படையிலானது. அத்தியாவசிய மருந்துகள் என்றும் அழைக்கப்படும், இந்த மருந்துகள் சில்லறை நுகர்வோருக்கு நேரடியாக விற்கப்படுவதைத் தவிர, பல்வேறு அரசாங்க சுகாதார திட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றன.


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்வுடன் அரியர் தொகையும் வரும்...மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!


வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகரின் அலுவலகத்தை மேற்கோள் காட்டி, கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு வரை WPI 12.12 சதவீதமாக இருந்தது என்று தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், இந்த சதவிகித அளவு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மருந்துகளின் விலை உயர்வு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வலி ​​நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் இதய நோய் மருந்துகள் உட்பட சுமார் 900 மருந்துகளின் விலை 12% க்கும் அதிகமாக அதிகரிக்கலாம். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, பட்டியலில் இல்லாத மருந்துகளின் ( Non-Scheduled Drugs) விலை, அனுமதிக்கப்பட்ட உயர்வை விட அதிகமாக அதிகரித்துள்ளது. பட்டியலிடப்பட்ட மருந்துகள் விலைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. மீதமுள்ள மருந்துகள் திட்டமிடப்படாத மருந்துகளின் வகையின் கீழ் வருகின்றன. பட்டியலில் இல்லாத விலைகள் 10 சதவீதம் வரை அதிகரிக்கப்படலாம். ஆனால், விதிகளின்படி, அரசின் அனுமதியின்றி, பட்டியலில் இல்லாத மருந்துகளின் விலையை உயர்த்த முடியாது.


மருந்து விலைக் கட்டுப்பாட்டாளர் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) முந்தைய காலண்டர் ஆண்டின் வருடாந்திர மொத்த விலைக் குறியீட்டின்படி (WPI) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 ஆம் தேதி அல்லது அதற்கு முன் உச்சவரம்பு விலையைத் திருத்துவதற்கு அனுமதிக்கப்படுகிறது. 2013 ஆம் ஆண்டு மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையின் 16 வது பிரிவில் இது தொடர்பான விதி உள்ளது. இதன் அடிப்படையில், NPPA ஒவ்வொரு ஆண்டும் மருந்துகளின் விலைகளை திருத்துகிறது. புதிய விலைகள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும்.


மேலும் படிக்க | முதலில் DA உயர்வு..இப்பொது மற்றொரு ஜாக்பாட் செய்தி ஊழியர்களுக்கு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ