மக்களவைத் தேர்தல் 2024 முதல் கட்டம்: மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவுடன் தொடங்குகிறது. நாளை நாட்டின் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இம்முறை, மத்தியில் ஆட்சி அமைக்கும் நோக்கில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ள நிலையில், அதிகார வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சவாலை காங்கிரஸ் எதிர்கொண்டுள்ளது. கடந்த 2029 லோக்சபா தேர்தல் முதல் கட்ட தேர்தலில் 102 இடங்களுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. அதில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றது. இந்தமுறை அது சாத்தியமா? என்று பார்க்க காத்திருப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் கடந்த முறை போன்று இந்தமுறையும் (லோக்சபா தேர்தல் 2024) காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி (India Alliance) வெற்றி பெறுமா அல்லது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி (National Democratic Alliance) வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 


2019 மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற 102 தொகுதிகளில் 45 இடங்களில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (United Progressive Alliance) வெற்றி பெற்றது. அதே சமயம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 41 இடங்கள் கிடைத்தது. ​​2029 லோக்சபா தேர்தலின் முதல் கட்ட தேர்தலில் காங்கிரஸ் 65 இடங்களிலும், பாஜக 60 இடங்களிலும் தனது வேட்பாளர்களை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.


மக்களவைத் தேர்தல் 2024: பாஜக வேட்பாளர் பட்டில்


இதுவரை தென் இந்தியா மாநிலங்களில் கர்நாடகாவைத் தவிர, மற்ற மாநிலங்களில் அதிக இடங்களை பெற முடியாத பாஜக தனி கவனம் செலுத்தியுள்ளது. தற்போது வரை 430 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ள அக்கட்சி, 12 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 


மேலும் படிக்க - ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்.. 19ம் தேதி வாக்குப்பதிவு.. “மறக்காமல் சிந்தித்து வாக்களியுங்கள்”


மக்களவைத் தேர்தல் 2024: வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி


பிரதமர் மோடி வாரணாசியில் மீண்டும் போட்டியிடும் நிலையில், தமிழகத்தின் நீலகிரி தொகுதியில் ராஜ்யசபா உறுப்பினரும் அமைச்சருமான எல்.முருகன் போட்டியிடுகிறார் மற்றும் கேரளத் தலைநகரம் திருவனந்தபுரத்தில் சசி தரூரை எதிர்த்து ஐடி அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் வயநாட்டில் போட்டியிடுகிறார்.


எத்தனை தொகுதிக்கு முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது?


முதல் கட்ட வாக்குப்பதிவில் தமிழ்நாடு, புதுச்சேரி, தெலங்கானா, ஆந்திரபிரதேசம், கேரளா உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 102 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. 


மக்களவைத் தேர்தல் 2024 முழு ஆட்டவனை


2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி, 2024 ஜூன் 1 ஆம் தேதி வரை என ஏழு கட்டங்களாக நடக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மேலும் மக்களவைத் தேர்தல் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


>> முதல் கட்ட வாக்குப்பதிவு - ஏப்ரல் 19
>> இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு - ஏப்ரல் 26
>> மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு - மே 7
>> நான்காம் கட்ட வாக்குப்பதிவு -  மே 13, 
>> ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு -மே 20 
>> ஆறாம் கட்ட வாக்குப்பதிவு -  மே 25 
>> ஏழாம் கட்ட வாக்குப்பதிவு -  ஜூன் 1 


மேலும் படிக்க - தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024 முழு வேட்பாளர் பட்டியல்.. எந்த தொகுதியில் யார் போட்டி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ