நியூயார்க்: ஜி 20 உறுப்பினர்களின் புது தில்லி பிரகடனத்தை "சந்தேகத்திற்கு இடமின்றி" இது "இந்தியாவிற்கு ராஜதந்திர வெற்றி" என்று காங்கிரஸ் தலைவர் சசி தரூர் பாராட்டியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை ANI க்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், தரூர் கூறினார், “டெல்லி பிரகடனம் சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவிற்கு இராஜதந்திர வெற்றியாகும். இது ஒரு சிறத சாதனை, ஏனென்றால் G20 உச்சிமாநாடு கூட்டப்படும் வரை, பரவலான எதிர்பார்ப்பு எந்த உடன்பாடும் ஏற்படாது, எனவே, ஒரு கூட்டு பிரகடனம் சாத்தியமில்லை, என கூறப்பட்டது. ஆனால்,  ஜி20 உச்சிமாநாட்டின் தொடக்க நாளான சனிக்கிழமையன்று, பிரதமர் நரேந்திர மோடி, புது தில்லி ஜி20 தலைவர்களின் உச்சிமாநாட்டின் பிரகடனத்தின் மீது ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாள் முழுவதும் G20 அமர்வுகளுக்குத் தலைமை தாங்கிய பிரதமர் மோடி,  G20 உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை வாழ்த்தினார். புது டெல்லி பிரகடனத்தில் அனைத்து உறுப்பு நாடுகளையும் ஒருமித்த கருத்துக்கு கொண்டு வந்ததற்காக இந்தியாவை தரூர் மேலும் பாராட்டினார்.


" உக்ரைனில் ரஷ்யப் போரைக் கண்டிக்க விரும்புபவர்களுக்கும், ரஷ்யா மற்றும் சீனாவை ஆதரிப்பவர்கள் ஆகி நாடுகள் என  நாடுகள் இடையே பெரிய இடைவெளி இருந்தது. அந்த இடைவெளியைக் குறைத்து, ஒருமித்த பிரகடப்னம் வெளியானது, இந்தியாவின் குறிப்பிடத்தக்க இராஜதந்திர சாதனையாகும். ஏனெனில் கூட்டு பிரகடனம் இல்லாமல் போனால், உச்சிமாநாட்டிற்கு தலை தாங்கிய நாட்டிற்கும் தலைவருக்கும் எப்போதும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது, ”என்று தரூர் மேலும் கூறினார்.


இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி20 உச்சிமாநாட்டை நடத்துவது குறித்து கூறுலையில், அரசாங்கம் உண்மையில் அதை 'மக்கள் ஜி20' ஆக மாற்றியதாகத் தெரிவித்த தரூர், உலகத் தலைவர்களின் மெகா கூட்டணியை உலகத் தலைவர்களின் மெகா கூட்டணியை தங்களுக்கான வெற்றியாக கட்சி விளம்பரப்படுத்துகிறது.


மேலும் படிக்க | சீனாவை பதற வைத்த இந்தியா! ஜி 20 மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு!


"இந்தியாவின் தலைமை பதவியில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், முந்தைய எந்த G20 தலைவர்களும் செய்யாத ஒன்றை அவர்கள் செய்தார்கள். 58 நகரங்களில் 200 கூட்டங்கள் மற்றும் பெரிய அளவிலான நடவடிக்கைகளுடன், அவர்கள் அதை ஒரு நாடு தழுவிய நிகழ்வாக மாற்றினர். அவர்கள் G20 ஐ ஒரு வகையான 'மக்கள் G20' ஆக மாற்றினர். பொது நிகழ்வுகள், பல்கலைக்கழக இணைப்பு திட்டங்கள், சிவில் சமூகங்கள், இவை அனைத்தும் ஜி20 தலைமையின் கீழ் செய்யப்பட்டன. ஜி 20 பற்றிய செய்தியை  மக்கள் அனைவருக்கும் எடுத்துச் சென்றதற்காக இந்தியாவுக்கு இது சில வழிகளில் பெருமை என்றார் தரூர்.


பிரதமர் மோடி, ஞாயிற்றுக்கிழமை G20 உச்சிமாநாட்டின் முடிவை அறிவிக்கும் போது, சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றத்தில் செய்யப்பட்ட பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்ய நவம்பரில் மெய்நிகர் G20 அமர்வை நடத்த முன்மொழிந்தார்.


அதற்கு தரூர், “அதைச் செய்ய அவர்களுக்கு முழு உரிமை உண்டு, அவர்கள் ஆளும் கட்சி. பல நாடுகள் ஜி 20 நிகழ்வை நடத்தியிருக்கின்றன, ஆனால் ஒரு ஆளும் கட்சி தனது தலைமைத்துவத்தை, முழு விஸ்வகுரு கருத்தையும், டெல்லியில் ஒவ்வொரு 50 மீட்டருக்கும் திரு மோடியின் போஸ்டர்களைக் கொண்டாடியதில்லை. இவை அனைத்தும் திரு மோடி மற்றும் பாஜக அரசாங்கத்தின் தனிப்பட்ட சாதனை என்று விளம்பரப்படுத்துகிறது என்றும் விமர்சித்தார்.


உச்சிமாநாடு முடிவடைந்ததாக அறிவிப்பதற்கு முன், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் பிரதமர் மோடி ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை வழங்கினார். இந்தியா கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி ஜி 20 தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டது மற்றும் ஜி 20 தொடர்பான சுமார் 200 கூட்டங்கள் நாடு முழுவதும் 60 நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | G-20: வெளிநாடு விருந்தினர்களுக்கு ₹ 18 கோடி வாடகையில் 20 லிமோசின் கார்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ