மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர், தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ கணக்கை 'லாக்' செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. வியாழக்கிழமை நடந்துள்ள இந்த சம்பவம் குறித்து காங்க்கிரஸ் கட்சி ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் (Twitter), தனது கணக்கை 'லாக்' செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டி காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் கணக்கின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து கொண்டது. ஸ்கிரீன்ஷாட்டில், "உங்கள் கணக்கு லாக் செய்யப்பட்டுள்ளது" என்ற செய்தி இருந்தது.


"இந்த கணக்கு ட்விட்டர் விதிகளை மீறியது என்பதை நாங்கள் தீர்மானிக்கிறோம். குறிப்பாக, தனிப்பட்ட தகவல்களை பதிவிடுவதற்கு எதிரான எங்கள் விதிகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் தனிப்பட்ட தகவல்களை அவர்களின் அங்கீகாரம் மற்றும் அனுமதியின்றி நீங்கள் வெளியிடவோ அல்லது பதிவிடவோ கூடாது" என்று ஸ்கிரீன்ஷாட்டில் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.



ALSO READ: ராகுல் காந்திக்கு பிறகு, 5 மூத்த காங்கிரஸ் தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்


இந்த செய்தி உள்ள படத்தைப் பகிர்ந்த காங்கிரஸ் (Congress) தலைவர்கள், "எங்கள் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டபோதே நாங்கள் பயப்படவில்லை, பிறகு எங்கள் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்படும் போது மட்டும் நாங்கள் ஏன் அச்சப்படப் போகிறோம்? நாங்கள் எதற்கும் அஞ்சாத காங்கிரஸ் கட்சி. இது மக்களுக்கான செய்தி. நாங்கள் போராடுவோம்; நாங்கள் தொடர்ந்து போராடுவோம்" என்ற செய்தியை வெளியிட்டுள்ளனர்.


முன்னதாக, ராகுல் காந்தியின் (Rahul Gandhi) ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சுர்ஜேவாலா உட்பட ஐந்து மூத்த தலைவர்களின் ட்விட்ட ர் கணக்குகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கூறியது.


அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அஜய் மாக்கேன், காங்கிரஸ் மக்களவை கட்சியின் கொறடா மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் அஸ்ஸாம் பிரிவு பொறுப்பாளர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் காங்கிரஸ் மகளிரணி தலைவர் சுஷ்மிதா தேவ் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.


ALSO READ: Twitter To Court After Violation: ராகுல் காந்தியின் பதிவை நீக்கினோம், கணக்கை முடக்கினோம்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR