வங்கி கணக்குகள் என்பது, அனைவருக்கும் மிகத்தேவையான ஒரு விஷயமாக இருக்கிறது. அரசின் சேவைகளை பெறுவதற்கு, உதவி தொகைகள் நம் கைகளில் வந்து சேர்வதற்கு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள், காசோலை மூலம் பணம் எடுத்தல் என பல்வேறு செலவுகளுக்கும் வரவுகளுக்கும் உதவிகரமாக இருக்கிறது, வங்கி கணக்குகள். தற்போது உலகமே டிஜிட்டல் மயமாகிவிட்டதால் தற்போது பணப்பரிவர்த்தனைகளும் கூட ஆன்லைனிலேயே நடைபெறுகிறது. இவையனைத்திற்கும் அடித்தளமாக இருப்பது, வங்கி கணக்குகள்தான். இந்த வங்கி கணக்குகள், முடங்கி விட்டால் நம்மால் என்ன செய்ய முடியும்? திடீரென்று அக்கவுண்ட் ஃப்ரீஸ் ஆகிவிட்டால் நாம் திகைத்து போய் விடுவோம் அல்லவா? அதே போல வாடிக்கையாளர்கள் சிலரை திகைக்க வைக்கும் வகையில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.
மூடப்படும் வங்கி:
பொதுத்துறை பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB)கணக்கு வைத்திருப்பவர்களுக்கான செய்திதான் இது. இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்குகளில் எந்த பணப்பரிவர்த்தனை நடைப்பெற்றிருக்கவில்லை என்றாலும், அந்த கணக்குகள் முடக்கப்பட்டுவிடும் என பி.என்.பி வங்கி எச்சரித்திருக்கிறது. அது மட்டுமன்றி, வங்கி கணக்கில் நிலுவைத்தொகை (Minimum Balance) இல்லை என்றாலும் அந்த கணக்குகள் 1 மாதத்திற்குள்ளாக மூடப்படும் என அந்த வங்கி தங்களின் வாடிக்கையாளர்களை எச்சரித்திருக்கிறது. உபயோகிப்படாத கணக்குகளை, தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த வங்கி தெரிவித்திருக்கிறது. இந்த மூன்று ஆண்டுகளுக்கான கணக்கீடு, ஏப்ரல் 30ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
25 வயதிற்கும் கீழுள்ள வாடிக்கையாளர்களின் கணக்குகள், சுகன்யா சம்ரித்தி திட்ட கணக்குகள், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா கணக்குகள், டிமேட் கணக்கு இணைந்த வங்கி கணக்குகள், ஆக்டிவ் லாக்கருடன் இருக்கும் கணக்குகள் ஆகியவை DBTக்கு திறக்கப்படாது எனவும் அந்த வங்கி அறிவித்திருக்கிறது. இந்த கணக்குகளை தவிர, வருமான வரித்துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அரசு துறைகளால் மூடப்பட்ட கணக்குகள் இதன் கீழ் வராது என வங்கி தெரிவித்திருக்கிறது. இந்த வகையான கணக்கை கொண்ட வாடிக்கையாளர்கள், UPI ஐடி, QR குறியீடு ஆகிவற்றின் மூலமாக பணம் செலுத்திக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.
வங்கி கணக்குகள் மூடப்படுவதற்கான காரணங்கள் என்ன?
>பணப்பரிவர்த்தனை இல்லாமல் இருத்தல்: வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கவில்லை என்றாலோ, பணம் செலுத்தவில்லை என்றாலோ, அந்த கணக்கு முடக்கப்படும். மூன்று முதல் 5 வருடங்களுக்கு அந்த கணக்கு செயல்படவில்லை என்றால் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும்.
>0 பேலன்ஸ் அல்லது நெகடிவ் பேலன்ஸ் : அனைத்து வங்கிகளிலும் ஒரு குறிப்பிட்ட நிலுவைத்தொகையானது நியமிக்கப்பட்டிருக்கும். அந்த நிலுவைத்தொகையை நாம் மொத்தமாக எடுத்திருந்தாலும், அது நெகடிவாக சென்றாலும் நம் கணக்கு முடக்கப்பட்டுவிடும்.
>மோசடி நடவடிக்கை: உங்கள் வங்கிக்கணக்கில் மோசடி நடவடிக்கைகள் தென்பட்டால், அந்த கணக்கு உடனே முடக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
மேலும் படிக்க | இந்த பிரபல வங்கிக்கு கடுமையான அபராதம் விதித்துள்ள ரிசர்வ் வங்கி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ