Lok Sabha Elections: 2024 மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்றது. மூன்றாவது கட்டமாக 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தக் கட்டத்தில் உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்கள், சத்தீஸ்கரில் 7 இடங்கள், மத்தியப் பிரதேசத்தில் 9 இடங்கள், அசாமில் 4 இடங்கள், பீகாரில் 5 இடங்கள், மகாராஷ்டிராவில் 11 இடங்கள், தாதர்-நகர் ஹவேலி மற்றும் கோவாவின் டாமன்-டியுவில் தலா ஒரு இடத்துக்கும், உத்தரபிரதேசத்தில் 2 இடங்களுக்கும், கர்நாடகாவில் 14 இடங்களுக்கும், மேற்கு வங்கத்தில் 4 இடங்களுக்கும், குஜராத்தில் 25 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இந்த தொகுதிகளில் சில முக்கிய விஐபி வேட்பாளர்களும் இன்று களத்தில் உள்ளனர். இன்று களம் காணும் முக்கிய விஐபி வேட்பாளர்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
காந்திநகர்
குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா போட்டியிடுகிறார். ஆகையால், அனைவரின் கவனமும் இந்த தொகுதியின் மீது உள்ளது. இந்த தொகுதியில் அவர் இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். 2019 மக்களவைத் தேர்தலில் அமித் ஷா ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு வெற்றி பெற்றார். இந்த ஆண்டு அமித் ஷா 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று கட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த தொகுதி நீண்ட காலமாக பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது. அடல் பிஹாரி வாஜ்பாய், லால் கிருஷ்ண அத்வானி போன்ற மூத்த தலைவர்களும் இங்கிருந்து வெற்றி பெற்றுள்ளனர். இந்த முறை காங்கிரஸ் கட்சி, குஜராத் மகளிர் பிரிவு தலைவி சோனல் படேலை அமித் ஷாவுக்கு எதிராக இங்கு நிறுத்தியுள்ளது.
மேன்புரி
உத்தரப் பிரதேசத்தின் மேன்புரி தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதி சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக இருந்து வருகிறது. இந்த தொகுதியில் டிம்பிள் யாதவ் போட்டியிடுகிறார். மெயின்புரி மக்களவைத் தொகுதி மறைந்த முலாயம் சிங்கின் கர்ம பூமியாக இருந்த ஒரு தொகுதியாகும். முலாயம் சிங் யாதவ் மறைவுக்குப் பிறகு, 2022-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது மருமகள் டிம்பிள் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அவருக்கு எதிராக பாஜக சார்பில் ஜெய்வீர் சிங்கும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சிவபிரசாத் யாதவும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
விதிஷா
மத்திய பிரதேசத்தின் விதிஷா தொகுதியிலும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதியில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் போட்டியிடுகிறார். சிவராஜ் சிங் சவுகான் ஐந்து முறை எம்.பி.யாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு போட்டியாக பிரதாப் பானு சர்மா களத்தில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் பானு சர்மா 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை இப்பகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இப்பகுதியில் வெற்றி பெற்ற ஒரே காங்கிரஸ் தலைவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராமதி
இந்த ஆண்டு, என்சிபியின் கோட்டையாகக் கருதப்படும் பாராமதி தொகுதியின் மேலும் அனைவரது கவனமும் உள்ளது. ஏனெனில் இங்கு மிகவும் சுவாரஸ்யமான போட்டி நடைபெற உள்ளது. ஒரு பக்கம் என்சிபி வேட்பாளரும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே களத்தில் உள்ளார். மறுபுறம் துணை முதல்வர் அஜித் பவார் தனது மனைவி சுனேத்ரா பவாரை இங்கு களமிறக்கியுள்ளார். அதாவது பாராமதி தொகுதியில் குடும்ப உறுப்பினர்களே ஒருவருக்கு எதிராக ஒருவர் களத்தில் உள்ளனர் என்றே கூறலாம்.
ராஜ்கர்
மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ள மற்றொரு தொகுதி ராஜ்கர். மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் இங்கிருந்து தேர்தலில் போட்டியிடுகிறார். திக்விஜய் சிங் பாஜக எம்பி ரோட்மல் நாகரை எதிர்த்து போட்டியிடுகிறார். ரோட்மல் நாகர் இங்கிருந்து இரண்டு முறை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் ரோட்மல் நாகர் இந்த தொகுதியில் அமோகமாக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்டத்தில் இந்த தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது
- பீகார்: ஜாஞ்சர்பூர், அராரியா, சுபால், மாதேபுரா மற்றும் ககாரியா.
- உத்தரப்பிரதேசம்: சம்பல், ஹத்ராஸ், ஆக்ரா (SC), ஃபதேபூர் சிக்ரி, ஃபிரோசாபாத், மைன்புரி, எட்டா, படவுன், அனோலா, பரேலி.
- குஜராத்: கட்ச், பனஸ்கந்தா, படன், மகேசனா, சபர்கந்தா, காந்திநகர், அகமதாபாத் கிழக்கு, அகமதாபாத் மேற்கு, சுரேந்திரநகர், ராஜ்கோட், போர்பந்தர், ஜாம்நகர், ஜுனாகத், அம்ரேலி, பாவ்நகர், ஆனந்த், கெடா, பஞ்சமஹால், தாஹோத், வதோதரா, சோட்டா உதய்பூர், பருச், பர்தோலி , நவ்சாரி, வல்சாத்.
- அசாம்: துப்ரி, கோக்ரஜார், பார்பெட்டா, குவஹாத்தி.
- சத்தீஸ்கர்: சர்குஜா, ராய்கர், ஜாஞ்ச்கிர்-சம்பா, கோர்பா, பிலாஸ்பூர், துர்க், ராய்பூர்.
- கர்நாடகா: சிக்கோடி, பெல்காம், பாகல்கோட், பிஜாப்பூர், குல்பர்கா, ராய்ச்சூர், பிதார், கொப்பல், பெல்லாரி, ஹாவேரி, தார்வாட், உத்தர கன்னடா, தாவணகெரே, ஷிமோகா.
- மத்தியப் பிரதேசம்: மொரேனா, பிந்த், குவாலியர், குணா, சாகர், விதிஷா, போபால், ராஜ்கர், பெதுல்.
- மகாராஷ்டிரா: பாராமதி, ராய்கர், தாராஷிவ், லத்தூர் (SC), சோலாப்பூர் (SC), மாதா, சாங்லி, ரத்னகிரி-சிந்துதுர்க், கோலாப்பூர், ஹட்கனங்கலே.
- மேற்கு வங்கம்: மல்தஹா வடக்கு, மல்தஹா தெற்கு, ஜாங்கிபூர், முர்ஷிதாபாத்.
- கோவா: வடக்கு கோவா, தெற்கு கோவா
- டாமன் மற்றும் டையூ: டாமன் மற்றும் டையூ
- தாதர் மற்றும் நகர் ஹவேலி: தாதர் மற்றும் நகர் ஹவேலி
மேலும் படிக்க | கட்டுக்கட்டாக சிக்கிய ரூ. 25 கோடி... ஜார்க்கண்டில் அமலாக்கத்துறை ரெய்டு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ