நரேந்திர மோடி மற்றும் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தின் பெயரை மாற்றவும்: காங்கிரஸ்
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம் போல நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.
புது டெல்லி: ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மறுபெயரிடப்பட்டது: "ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது" (Rajiv Gandhi Khel Ratna Award) என்பதை "மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது" (Major Dhyan Chand Khel Ratna Award) என்று மாற்றும் முடிவை காங்கிரஸ் வரவேற்கிறது. அதேநேரத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியம் (Narendra Modi Stadium) மற்றும் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தின் பெயர் மாற்றப்பட வேண்டும் என்றும், அதற்கு விளையாட்டு வீரர்களின் பெயர்களை வைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார். பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனதொடங்கிவிட்டது, எனவே நன்றாகத் தொடங்குங்கள் என்றார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், "ஹாக்கி வீரர் (Hockey Great) மேஜர் தியான் சந்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக பெயர் மாற்றம் செய்ததை காங்கிரஸ் வரவேற்கிறது. மேஜர் தியான் சந்தின் பெயரை பாஜக மற்றும் பிரதமர் மோடி அவர்களின் அற்ப அரசியல் நோக்கங்களுக்காக இழுக்காமல் இருந்தால் நல்லது. மேஜர் தியான் சந்தின் பெயரிடப்பட்ட கேல் ரத்னா விருதை வரவேற்கிறோம்.
மேலும் அவர் கூறுகையில், "ராஜீவ் காந்தி இந்த நாட்டின் ஹீரோ. ராஜீவ் காந்தி எந்த விருதும் பெற்றவர் அல்ல. ஆனால் தியாகி, சிந்தனை மற்றும் நவீன இந்தியாவை கட்டியமைத்தவர். இன்று, ஒலிம்பிக் நடைபெறும் இந்த ஆண்டில் கூட, பிரதமர் மோடி விளையாட்டுக்கான பட்ஜெட்டில் 230 கோடி குறைத்துள்ளார். பிரதமர் மோடி கவனத்தை திசை திருப்புகிறார்.
முதலில் நரேந்திர மோடி மற்றும் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தின் (Arun Jaitley Stadium) பெயரை மாற்றவும். இந்த விளையாட்டு அரங்கத்திற்கு நாட்டின் விளையாட்டு வீரர்களின் பெயரிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார். இப்போது பிடி உஷா, சர்தார் மில்கா சிங், மேரி கோம், சச்சின் டெண்டுல்கர், கவாஸ்கர் மற்றும் கபில் தேவ் ஆகியோரின் பெயரரை வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
இப்போது விளையாட்டுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு அபினவ் பிந்த்ரா, விஸ்வநாதன் ஆனந்த், புல்லேலா கோபிசந்த், லியாண்டர் பயஸ் மற்றும் சானியா மிர்சா ஆகியோரின் பெயரிட வேண்டும் என்று அவர் கூறினார். முதலில் நரேந்திர மோடி மற்றும் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தின் பெயரை மில்கா சிங் ஸ்டேடியமாக மாற்றவும். இந்த முடிவை நாடு முழுவதும் வரவேற்கும்.
பெயர் மாற்றம் தொடங்கிவிட்டது, எனவே நன்றாகத் தொடங்குங்கள். அனைத்து தரப்பில் இருந்தும் தொடங்குங்கள் எனவும் கூறினார்.
இந்தியாவின் மிக உயர்ந்த விளையாட்டு விருதான கேல் ரத்னா விருதுக்கு, இனி மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என்று பெயரிடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) இன்று ட்வீட் செய்து அறிவித்தார்.
அதி அவர், இந்தியா முழுவதும் உள்ள மக்களிடமிருந்து கேல் ரத்னா விருதுக்கு மேஜர் தியான் சந்த்தின் பெயரிடுமாறு பல கோரிக்கைகளை நான் பெற்று வருகிறேன். அவர்களின் கருத்துக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். அவர்களின் உணர்வை மதித்து, கேல் ரத்னா விருது மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என்று அழைக்கப்படும்! ஜெய் ஹிந்த்! என்று தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR