இந்தியாவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீர்ரகளுக்கு வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இனி மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை சற்று நேரம் முன்னர் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
ஹாக்கி விளையாட்டின் ஜாம்பவானாக விளங்கிய மேஜர் தியான்சந்த் அவர்களின் புகழுக்கும் அவர் நாட்டிற்கு விளையாட்டுத் துறையில் ஆற்றியுள்ள பங்களிப்புக்கும் அங்கீகாரம் வழங்கும் வகையில் இந்த கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்ந்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்:
தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து எழுதிய மோடி, ‘இந்தியா முழுவதும் உள்ள மக்களிடமிருந்து கேல் ரத்னா விருதுக்கு மேஜர் தியான் சந்த்தின் பெயரிடுமாறு பல கோரிக்கைகளை நான் பெற்று வருகிறேன். அவர்களின் கருத்துக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். அவர்களின் உணர்வை மதித்து, கேல் ரத்னா விருது மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என்று அழைக்கப்படும்! ஜெய் ஹிந்த்! ” என்று தெரிவித்துள்ளார்.
Major Dhyan Chand was among India’s foremost sportspersons who brought honour and pride for India. It is fitting that our nation’s highest sporting honour will be named after him.
— Narendra Modi (@narendramodi) August 6, 2021
தியான் சந்த் ஆகஸ்டு 29, 1905 இல் அலகாபாத்தில் பிறந்தார். இவரது தந்தை சமேஷ்வர் சிங், தாய் சரதா சிங் ஆவர். இவரின் தந்தை பிரிட்டிஷ் இந்தியப் பாதுகாப்புப் படையில் இருந்தபோது இராணுவ ஹாக்கி அணியில் விளையாடினார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR