படுதோல்வி எதிரொலி!! நாளை கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி
மக்களவைத் பொதுத்தேர்தலில், தொடர்ச்சியாக இரண்டாவது முறை சந்தித்த மோசமான தோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் காரிய கமிட்டி நாளை டெல்லியில் கூடுகிறது.
மக்களவைத் பொதுத்தேர்தலில், தொடர்ச்சியாக இரண்டாவது முறை சந்தித்த மோசமான தோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் காரிய கமிட்டி நாளை டெல்லியில் கூடுகிறது.
நாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
ஆரம்ப முதலே அதிக இடங்களில் முன்னணி வகித்த பாஜக 350 இடங்களில் முன்னணி பெற்று மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. காங்கிரஸ் கட்சிக்கு 92 இடங்களிலும், மற்றவை 100 இடங்களில் முன்னணியில் உள்ளனர்.
இந்நிலையில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக ராகுல் காந்தி தெரிவித்தார். மேலும் தொடர்ச்சியாக இரண்டாவது முறை சந்தித்த மோசமான தோல்வி குறித்து ஆய்வு செய்ய காங்கிரஸ் காரிய கமிட்டி நாளை டெல்லியில் கூடுகிறது. அதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.