Amit Shah Latest News: அரசியலமைப்புச் சட்டம் மீதான விவாதத்தின் போது உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது நாடு முழுவதும் பேசுப்பொருளாக மாறியுள்ளது. அம்பேத்கரை பற்றி அமித் ஷா என்ன சொன்னார்? எதிர்க்கட்சிகள் ஏன் கண்டனம் தெரிவித்து வருகின்றன? அமித் ஷா மன்னிப்பு கேட்பாரா? பிரமர் மோடி என்ன கூறினார்? போன்ற விவரங்களை பார்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமித் ஷா பதவி விலகக் கோரிக்கை


பாபா சாகேப் அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வரும் நிலையில், அம்பேத்கர் குறித்த தான் பேசியதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். அம்பேத்கர் குறித்த கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகக் கோரி, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இன்று இந்தியா முழுவதும் போராட்டங்களை நடத்த உள்ளனர். 


அம்பேத்கர் குறித்த சர்ச்சை


மக்களவையில் நேற்று அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 2 நாள் விவாதத்தின் முடிவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்" என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், ஏழு பிறவிகளுக்கும் சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் பயனபடுத்துவது பாரதிய ஜனதா கட்சி மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் பேச வேண்டும் என்று கூறினார். அமித் ஷாவின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பை பதிவு செய்தது. 


அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்


அம்பேத்கரை அவமதித்ததாகக் கூறி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மன்னிப்பு கேட்கக் கோரி, எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கிய நிலையில்,  தனது உரை குறித்து அமித் ஷா விளக்கம் அளித்தார். அப்பொழுது காங்கிரஸ் கட்சி உண்மைகளை திரித்து கருத்துகளை முன்வைத்து வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்


மேலும் அவர் கூறுகையில், நாடாளுமன்றம் போன்ற நாட்டின் மிக உயர்ந்த ஜனநாயக மன்றத்தில் விவாதம் நடைபெறும் போது, அது உண்மைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி நேற்று முதல் உண்மைகளை திரித்து பேசிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்கு முன்பு அவர்கள் நரேந்திர மோதியின் கருத்துகளை திரித்து கூறினர். தேர்தலின் போது, எனது அறிக்கைகளை செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி திரித்தனர். அம்பேத்கரை ஒருபோதும் அவமதிக்க முடியாத கட்சியைச் சேர்ந்தவன் நான். அம்பேத்கரின் கொள்கைகளை நாங்கள் நாடு முழுவதும் எடுத்து செல்கிறோம் என்றார்.


அமித் ஷாவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி 


அம்பேத்கர் விவகாரத்தில் காங்கிரஸை கடுமையாகத் தாக்கி தனது எக்ஸ் (X) பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி, "அழுகிப்போன" மற்றும் "தீங்கிழைக்கும் பொய்கள்" மூலம் அதன் தவறான செயல்களை மறைக்க முடியாது என்றும், நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதித்த இருண்ட அத்தியாயத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா அம்பலப்படுத்தி உள்ளார். அவர் முன்வைத்த உண்மைகளால் அவர்கள் திகைத்துவிட்டனர். அதனால்தான் அவர்கள் இப்போது நாடகங்களில் ஈடுபடுகிறார்கள். அம்பேத்கருக்கு எதிராக இழைக்கப்பட்ட பாவங்களின் நீண்ட பட்டியல் காங்கிரஸிடம் உள்ளது. அதில் அவரை இரண்டு முறை தேர்தலில் தோற்கடித்ததும் அடங்கும். துரதிர்ஷ்டவசமாக, இந்த உண்மை மக்களுக்கும் தெரியும்" என பிரதமர் பிதிவிட்டுள்ளார்.


அமித் ஷாவுக்கு எதிராக சிறப்புரிமை தீர்மானம் 


காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி), ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி), ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி), சமாஜ்வாடி கட்சி (எஸ்பி), சிவசேனா (யுபிடி) மற்றும் இடதுசாரிகள் போன்ற கட்சிகள் அமித்ஷாவுக்கு எதிராக நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன் ராஜ்யசபாவில் ஷாவுக்கு எதிராக சிறப்புரிமை தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் சமர்ப்பித்தார். 


நாடு முழுவதும் போராட்டம் -கார்கே எச்சரிக்கை


மேலும் அமித்ஷா பதவி விலகாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.


அமித்ஷாவின் பேச்சை கண்டித்த ராகுல் காந்தி


அம்பேத்கர் குறித்து அமித்ஷாவின் பேச்சை கண்டித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் (X) பக்கத்தில், "மனுதர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அம்பேத்கர் பிரச்னையாகத்தான் தெரிவார்" எனப் பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க - ஒரே நாடு ஒரே தேர்தல் நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற்ற முக்கிய எம்.பி.க்கள் லிஸ்ட்


மேலும் படிக்க - அம்பேத்கரை அவமதித்தாரா அமித் ஷா? பதவி விலக கோரிக்கை... அப்படி என்ன பேசினார் அவர்...?


மேலும் படிக்க - வளர்ச்சியடைந்த இந்தியா... கனவை அடைய இந்த 11 விஷயங்களும் முக்கியம் - பிரதமர் மோடி போட்ட பட்டியல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ