புதுடெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 91,702 புதிய கோவிட் -19 தொற்று பாதிப்புகள் மற்றும் 3,403 இறப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 11, 2021) தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் மொத்த கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு  2,92,74,823  ஆக அதிகரித்துள்ளது. அவற்றில் இதுவரை மொத்தம் 3,63,079 பேர் வைரஸ் தொற்று பாதிப்பால் இறந்து விட்டனர். அதே நேரத்தில் 11,21,671 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.


மேலும், நேற்று, அதாவது ஜூன் 10ம் தேதி, வியாழக்கிழமை 20,44,131 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன.  இதை அடுத்து நாட்டில் COVID-19 தொற்று பரிசோதனையின் மொத்த ஒட்டுமொத்த சோதனைகளை 37,42,42,384 ஆக அதிகரித்துள்ளது.


தினசரி பரிசோதிக்கப்படுபவர்களில், தொற்று பாதிப்பு உறுதியாகும் விகிதம் 4.49 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்த விகிதம், தொடர்ந்து 18 வது நாளாக 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது, வாராந்திர தொற்று பாதிப்பு உறுதியாகும் விகிதமும் 5.14 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.


குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 29 வது நாளாக தினசரி புதிய பாதிப்புகளை விட அதிகமாக உள்ளன. நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,77,90,073 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.24 சதவீதமாக அதிகரித்துள்ளதாக என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


ALSO READ | COVID-19 Vaccine: கல்வி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கான வழிமுறைகள்


இதற்கிடையில், COVID-19 நோய்த்தொற்று ஏற்பட்ட  நபர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை என்றும், அவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட நாட்களுக்கு பின்னரே போட வேண்டும் என்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறினர்.  திட்டமிட்டபடி, அரசின் பரிந்துரைகளை பின்பற்றி தடுப்பூசி (Corona Vaccine) போட வேண்டும் எனவும், அதன் மூலம் தொற்றை கட்டுபடுத்த முடியும் எனவும் குமருத்துவர்கள் கூறியுள்ளனர்.
 


COVID-19 ஐக் கட்டுப்படுத்த இந்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக இந்தியாவின் பிரபல பொது சுகாதார நிபுணர்களின் கூட்டு பணிக்குழு 2020 ஏப்ரல் மாதம் இந்திய பொது சுகாதார சங்கம் (ஐபிஹெச்ஏ) மற்றும் இந்திய தடுப்பு மற்றும் சமூக மருத்துவ சங்கம் (ஐஏபிஎஸ்எம்) ஆகியோரால் அமைக்கப்பட்டது. நாட்டில் தொற்றுநோய், செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.


ALSO READ | கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயார்: யோகா குரு பாபா ராம்தேவ்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR