புது டெல்லி: நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் (Coronavirus in India) இன்னும் உச்சத்தை எட்டவில்லை. ஜூன் முதல் வாரம் கடந்து விட்டதால், நாட்டில் கொரோனா நிலைமை மேலும் பயமுறுத்தும் என்ற அச்சம் உள்ளது. கொரோனா நோய்த்தொற்றின் வீதம் இப்போது பெருகியுள்ளது. ஜூன் தொடக்கத்தில் இருந்து, ஒவ்வொரு நாளும் சுமார் 9-10 ஆயிரம் புதிய தொற்று பதிவாகி வருகின்றன. கடந்த 5 நாட்களின் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், புதிதாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பதிவாகியுள்ளன. இன்று நாட்டில் அன்லாக்-1.0 இன் முதல் நாள். ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு COVID-19 தொற்று மிக விரைவாக அதிகரிப்பது அரசாங்கங்களுக்கு பெரும் பதற்றத்தைத் தருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 20 நாட்களில் ஒன்றரை லட்சம் புதிய பாதிப்பு:
இந்தியாவில் கொரோனா வைரஸின் (Coronavirus) முதல் நோயாளி ஜனவரி 30 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. 100 பாதிப்பிலான எண்ணிக்கையை அடைய மார்ச் 15 வரை ஆனது. அடுத்த 64 நாட்களில், கொரோனா தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. அதாவது, இந்தியாவில் ஒரு லட்சம் கொரோனா வழக்குகள் ஏற்பட 109 நாட்கள் ஆனது. பொது முடக்கம்-4 மே 31 அன்று முடிவுக்கு வந்தது மற்றும் பல விலக்குகள் வழங்கப்பட்டன. அதன் பிறகு நோய்தொற்று வேகமாக அதிகரிக்கத் தொடங்கின. ஜூன் 2 ஆம் தேதி, நாட்டில் கொரோனா நோயாளிகளின் (Corona News) எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியது. அடுத்த 5 நாட்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா நோயாளிகளாக மாறினார்கள். தற்போது நாட்டில் 2.56 லட்சம் உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்று உள்ளன. கடந்த இரண்டு நாட்களில் இருந்து 10,000 க்கும் மேற்பட்ட புதிய வழக்குகள் தொடர்ந்து பதிவாகின்றன.


READ | சீனாவை விட மகாராஷ்டிராவில் அதிக கொரோனா தொற்று பாதிப்பு..


இந்தியாவில் வேகமெடுத்த கொரோனா தொற்று (Corona List in India) விவரம்: 


மொத்த நோய் தொற்று தேதி
1 30 ஜனவரி 2020
100 15 மார்ச் 2020
10,000 14 ஏப்ரல் 2020
50,000 7 மே 2020
1,00,00 19 மே 2020
1,50,000 27 மே 2020
2,00,000 2 ஜூன் 2020
2,50,000 8 ஜூன் 2020

இதுவரை 7,100 க்கும் மேற்பட்ட இறப்புகள்:
மத்திய சுகாதாரத் துறையின் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் இதுவரை 7135 இறப்புகள் கோவிட் -19 (Covid-19 Death) நோயினால் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 206 புதிய இறப்புகளுடன் கொரோனா வைரஸ் (Coronavirus List) நோயாளிகளின் எண்ணிக்கையும் 2,56,611 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, ​​1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் செயல்பட்டு வருகின்றன. சிகிச்சையின் பின்னர் குணமடைந்த 1.24 லட்சம் நோயாளிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தியாவின் மீட்பு விகிதம் 48.35 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 3.89 சதவீதமாகவும் உள்ளது.


READ | கை, கால்களை கட்டி வைத்து முதியவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனை


மகாராஷ்டிரா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது:
கொரோனாவிலிருந்து இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மகாராஷ்டிரா (Maharashtra). இது நாட்டின் 36% க்கும் அதிகமான நோயாளிகளைக் கொண்டுள்ளது (85,975). அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 31,667 பேருக்கும், டெல்லியில் 27, 654 பேருக்கும், குஜராத்தில் 19,592 பேருக்கு பாதிப்பு என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.