மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் அங்கடி Corona virusக்கு பலியானார்
கொரோனா நோய்த்தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி (Suresh Angadi) காலமானார்.
கொரோனா நோய்த்தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி (Suresh Angadi) காலமானார். இந்த மாத தொடக்கத்தில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு கொரோனாவுக்கான அறிகுறியில்லை (asymptomatic) என்று கூறப்பட்டது.
இந்த மாத தொடக்கத்தில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு கொரோனாவுக்கான அறிகுறியில்லை (asymptomatic) என்று கூறப்பட்டது.
மத்திய இணையமைச்சரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.
கர்நாடகாவின் பெலகாவி (Belagavi) மக்களைவைத் தொகுதி உறுப்பினர் சுரேஷ் அங்கடி. 65 வயதான மத்திய இணையமைச்சர் உடல்நலக் கோளாறால் ஒரு வாரத்திற்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு மத்திய அமைச்சர் ஒருவர் பலியானது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி அசோக் கஸ்தி உயிரிழந்தார். 55 வயதான அவர் கடந்த ஜூலை மாதம் தான் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார். பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கர்நாடகாவை சேர்ந்த இரு எம்.பிக்கள் ஒரே வாரத்திற்குள் கொரோனா வைரசுக்கு பலியாகியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Read Also | Maharashtra: COVID-ஐ வென்று வீடு திரும்பிய 106 வயது மூதாட்டி
மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடியின் மறைவுக்கு முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகவுடா மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தார், அங்கடி தனக்கு ஒரு தம்பியைப் போன்றவர் என்று அவர் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.