கொரோனா 4ம் அலை தொடங்கிவிட்டதா; வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்
Coronavirus Fourth Wave: நாட்டில் கொரோனா வைரஸின் நான்காவது அலை தொடங்கியுள்ளதா? இதைப் பற்றி ஒரு புதிய அறிக்கை வெளிவந்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு அனைவரையும் கவலையடைய செய்துள்ளது. இதனால் இந்த கொரோனா ஆபத்து இன்னும் தீரவில்லை என்றும், அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் மாநில முதல்வர்களுடன் புதன்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் நரேந்திர மோடி தெரிந்துயுள்ளார். இதற்கிடையில், ஒரு கணக்கெடுப்பு அறிக்கை வெளிவந்துள்ளது, அதன்படி கொரோனாவின் நான்காவது குறித்து நிபுணர்கள் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஒரு சர்வேயில் கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்வியில் சர்வதேச விமானங்களும் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் டெல்லி-என்சிஆரில் கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதையெல்லாம் வைத்துக்கொண்டு, இந்தியாவில் கொரோனாவின் நான்காவது அலை எப்போது வரும் என்று கேட்க்கப்பட்டது? இந்தக் கேள்விக்கு சுமார் 11,563 பேர் பதிலளித்துள்ளனர்.
நான்காவது அலை தொடங்கிவிட்டதா?
கொடுக்கப்பட்ட பதிலின் படி, 29% பேர் 2022ல் நான்காவது கோவிட் அலை வராது என்று நம்புகிறார்கள். அதே நேரத்தில், 4% பேர் கொடுத்த பதிலின் படி அடுத்த 6 மாதங்களில், நான்காவது அலை கோவிட் வராது என்றுள்ளனர். அதேசமயம் 34% பேர் நான்காவது அலை ஏப்ரல் மாதத்தில் தொடங்கியதாக தெரிவித்தனர். ஒட்டுமொத்தமாக, கணக்கெடுக்கப்பட்ட 3 இந்தியர்களில் ஒருவர் கோவிட்-19 இன் நான்காவது அலை தொடங்கியதாக தெரிவித்தனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் எக்ஸ்இ வேரியண்ட்
கொரோனா வைரஸ் எக்ஸ்இ வேரியண்ட் என்பது பி.ஏ. 1 மற்றும் பி.ஏ. 2 வகைகளின் மறு உருவாக்கம் அடைந்த வேரியண்ட் ஆகும். இத்துடன் ஒமிக்ரான் பி.ஏ.1 அல்லது பி.ஏ.2 வகைகளில் இல்லாத மூன்று வகைகளை கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தான் புது வேரியண்ட் எக்ஸ்இ என அழைக்கப்படுகிறது. தற்போது கண்டறியப்பட்டு இருக்கும் கொரோனா வைரஸ் எக்ஸ்இ வேரியண்ட் அதிவேகமாக பரவும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புது எக்ஸ்இ வேரியண்ட் பத்து சதவீதம் அதிவேகமாக பரவும் தன்மை கொண்டிருக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் கொரோனா வைரஸ் XE வேரியண்ட் பற்றிய ஆய்வுகள் மிகத் தீவரமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் எக்ஸ்இ வேரியண்ட் அறிகுறிகள்
புதிய வகை கொரோனா வைரஸ் எக்ஸ்இ வேரியண்ட் அறிகுறிகள் மிகத் தீவிரமாக இருக்குமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. கொரோனா வைரஸ் எக்ஸ்இ வேரியண்ட் பற்றிய விவரங்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி காய்ச்சல், தொண்டை வலி, இருமல், சளி, சரும எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் செரிமான கோளாறு உள்ளிட்டவை ஒமிக்ரான் வேரியண்ட் அறிகுறிகளாக இருக்கின்றன.
மேலும் படிக்க | மூளையின் செயல் திறனை பாதிக்கும் ‘5’ ஆபத்தான உணவுகள்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR