தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கும் தமிழக அரசு

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவிருக்கிறார்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 24, 2022, 02:29 PM IST
தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கும் தமிழக அரசு title=

சென்னை: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதன் எதிரொலியாக தமிழகத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

டெல்லி , ஹரியானா , உபி ஆகிய மாநிலங்களில் கோவிட் தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை. ஆனால் பிற மாநிலங்களில் அதிகரித்துவரும் கோவிட் தொற்றை மனதில் கொண்டு தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுகிறது.

மேலும் படிக்க | மீண்டும் அதிகரிக்கும் கொரோனா, பள்ளிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள்

அதில் கொரோனாவை கட்டுப்படுத்த ஏதேனும் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை பணிகள் தேவை என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆரோசனை மேற்கொள்கிறார்.

இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியு ம், மாநில முதலமைச்சர்களுடன் ஏப்ரல்27ம் தேதி ஆலோசனை நடத்துகிறார். அதில் தமிழகத்தின் நிலை, தடுப்பூசி நிலவரம் போன்றவற்றை பிரதமரிடம் தெரிவிக்கப்பட உள்ளது. 

முன்னதாக, அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றவும், அதிகாரிகள் உரிய முறையில் கண்காணிக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் படிக்க | Twindemic: ஒமிக்ரானுக்கு மத்தியில் ட்விண்டமிக் அச்சுறுத்தலும் வந்தால் என்ன செய்வது?

மேலும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் தேவையான அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பிய கடிதத்தில் தமிழகத்தில் கொரனோ பரவல் அதிகரிக்காத வகையில் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் பொதுமக்கள் கூட கூடிய இடங்களில் மீண்டும் முகக் கவசம் அணிவதை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

1.4 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி குறித்த காலத்திற்குள்ளாக செலுத்தாத நிலையில் அவர்களுக்கான தடுப்பூசி செயல்பாடுகளை உறுதிப்படுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க | மீண்டும் எகிறும் கொரோனா எண்ணிக்கை, பாசிடிவ் விகிதம் 5% தாண்டியது

மேலும், முதியவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்பு இருப்பவர்களை கண்டறிந்து பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தும் பணி , மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டம் ஆகியவற்றை தீவிரபடுத்தவும்  அறிவுறுத்தியுள்ளார்.

தேவையான நபர்களுக்கு பிசிஆர் கொரனோ பரிசோதனைகளை உடனுக்குடன் எடுத்து நோய் பாதிப்பு கண்டறிதல் , மருத்துவ கட்டமைப்புகளை அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் வைத்தல் அவசியம் ஆகும்.

உருமாறும் ஒமிக்ரான் பாதிப்பு மற்றும் வைரஸ் உருமாற்றத்தை உடனுக்குடன் கண்டறிய அதிக நோய் பாதிப்பு கண்டறியப்படும் இடங்களில் மாதிரிகள் பெறப்பட்டு மரபணு பகுப்பாய்வு செய்திடுவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க | கொரோனாவின் புதிய மாறுபாடு XE வகையின் முக்கிய அறிகுறிகள்

கொரோனா பரவல் தொடர்பாக பொதுமக்களிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக தமிழகத்தில் நோய் பரவல் குறைந்துள்ள நிலையில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுதல் வெகுவாக குறைந்து விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

அரசின் வழிகாட்டுதல் ஆன முக கவசம் அணிதல் தனிமனித இடைவெளி கை கழுவுதல் உள்ளிட்ட வழிகாட்டுதலை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் தமிழகத்தில் 93% ஒமிகிரான் BA2 வைரஸ் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாகவும் ,  XE வகை பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | COVID 4th Wave: ஒமிக்ரானில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க செய்ய வேண்டியவை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News