அனைத்து வித நெருக்கடியிலும் இந்தியர்களுக்கு துணை நிற்கும் இந்தியா: பிரதமர் மோடி
ஆப்கானிஸ்தானில் இருந்து நூற்றுக்கணக்கான இந்தியர்கள் ஆபரேஷன் `தேவி சக்தி` என்னும் நடவடிக்கையின் கீழ் தாயகம் அழைத்து வரப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.
புதுடெல்லி: COVID 19 காலம் அல்லது ஆப்கானிஸ்தான் நெருக்கடி என அனைத்து விதமான நெருக்கடியிலும் இந்தியா எப்போதுமே இந்தியர்களுக்காக துணை நிற்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) சனிக்கிழமை (ஆகஸ்ட் 28, 2021) கூறினார்.
ஜாலியன் வாலாபாக் நினைவுச்சின்னத்தின் புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை திறந்து வைக்கும் போது, உரையாற்றிய பிரதமர் (PM Narendra Modi), "இன்று, இந்தியர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால், உலகில் எங்கிருந்தாலும், இந்தியா அவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்ய உதவுகிறது. அது கொரோனா காலம் என்றாலும் சரி அல்லது ஆப்கானிஸ்தான் நெருக்கடி நிலை என்றாலு, சரி, இந்தியா எப்போதுமே இந்தியர்களுக்கு துணை நிற்கும்” என்றார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து நூற்றுக்கணக்கான இந்தியர்கள் ஆபரேஷன் 'தேவி சக்தி' மூலம் தாயகம் அழைத்து வரப்படுகிறார்கள் என்று பிரதமர் மோடி கூறினார். குரு கிருபையின் காரணமாக, புனித நூலான குரு கிரந்த் சாஹிப் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது என்று அவர் கூறினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுக் கொள்கைகளையும் திட்டங்களையும் வகுக்க குருமார்களின் போதனைகள் உதவுகின்றன என்று அவர் கூறினார்.
ALSO READ | Viral Pics: தாலிபான் ஆட்சிக்கு முன் ஆப்கானில் சுதந்திர பறவைகளாக இருந்த பெண்கள்
தற்போதைய உலகளாவிய நிலைமைகள் 'ஒரே பாரதம், வளமான பாரதம்' என்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்றும், தற்சார்பின் வலியுறுத்துவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
இந்தியா, குறிப்பாக, போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் இருந்து 260 க்கும் மேற்பட்ட இந்தியர்களை தாயகம் அழைத்து வந்துள்ளது. கோவிட் -19 பரவலின் போது, வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க நாடு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பல விமானங்களை இயக்கியது.
ஜாலியன் வாலாபாக் நினைவுச்சின்னத்தின் புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை திறந்து வைக்கும் போது உரையாற்றிய பிரதமர் மோடி, ஜாலியன் வாலாபாக் சுவர்களில் உள்ள தோட்டாக்களில் அப்பாவி இளைஞர்கள் கண்ட கனவுகள் இன்னும் தெரிகின்றன என்று கூறினார். இந்தியாவின் சுதந்திரத்திற்காக சர்தார் உதாம் சிங், சர்தார் பகத் சிங் போன்ற எண்ணற்ற போராளிகளை உருவாக்கிய இடம் ஜாலியன்வாலா பாக் என்று அவர் கூறினார்.
ஏப்ரல் 13, 1919 -ன் அந்த 10 நிமிடங்கள் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் அழியாத கதையாக மாறியது என்றும், சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் நவீன பதிப்பில் ஜாலியன் வாலாபாக் நினைவுச்சின்னத்தை அர்ப்பணிப்பது அனைவருக்கும் பெரும் உத்வேகத்திற்கான வாய்ப்பாகும் என்றும் அவர் கூறினார்
ஒவ்வொரு கிராமத்திலும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவுகூரப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்கள் என்று பிரதமர் மோடி கூறினார். சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய கட்டங்கள் மற்றும் தேசிய மாவீரர்களுடன் தொடர்புடைய இடங்களைப் பாதுகாக்கவும் அவற்றை முன்னுக்குக் கொண்டு வரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜாலியன்வாலா பாக் போல, நாடு முழுவதும் புதுப்பிக்கப்படும் தேசிய நினைவுச்சின்னங்களான அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ள ஒருங்கிணைந்த காட்சியகம், கொல்கத்தாவில் உள்ள பிப்லோபி பாரத் கேலரி ஆகியவை பற்றியும் குறிப்பிட்டார்.
ALSO READ | காபூல் விமான நிலையத்தில் ஒரு பாட்டில் தண்ணீர் ரூ. 3000, ஒரு தட்டு சோறு ரூ. 7500!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR