காபூல்: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி, தாலிபான்களின் பயங்கரவாத ஆட்சிமுறையிலிருந்து தப்பிக்கும் ஆசையுடன் காபூல் விமான நிலையத்தை அடையும் மக்கள், பசி மற்றும் தாகத்தால் தவிக்கின்றனர். விமான நிலையத்திற்கு வெளியே உணவு மற்றும் பானப் பொருட்கள் பல மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
இதுமட்டுமின்றி, கடைக்காரர்கள் ஆப்கான் நாணயத்திற்கு பதிலாக டாலர்களை கோருகின்றனர். அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் வீரர்கள் ஆப்கானியர்களுக்கு உதவி வந்தாலும், அனைவருக்கும் உணவு கிடைப்பது பெரும் பிரச்சனையாக உள்ளது.
டாலரில் பணம் செலுத்த வேண்டிய விலை
காபூல் (Kabul) விமான நிலையத்திற்கு வெளியே, ஒரு தண்ணீர் பாட்டில் 40 டாலர், அதாவது சுமார் 3000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு தட்டு சோறு, 100 டாலருக்கு விற்கப்படுகின்றது. இது இந்திய நாணயத்தின் படி சுமார் 7500 ரூபாய் ஆகும். மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கடைக்காரர்கள் ஆப்கானிஸ்தானின் நாணயத்திற்கு பதிலாக டாலர்களில் பணம் செலுத்துமாறு கோருகின்றனர்.
துருப்புக்கள் மக்களுக்கு உதவி வருகின்றன
ஆப்கானிஸ்தானை (Afghanistan) விட்டு வெளியேற காபூல் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருக்கிறார்கள். இவர்கள் பசி மற்றும் தாகத்தால் இறக்கும் நிலையில் உள்ளனர். எதுவும் சாப்பிடாமல், நீர் கூட அருந்தாமல் வெயிலில் நிற்க வேண்டிய கட்டாயத்தில் இவர்கள் இருக்கிறார்கள். இதன் காரணமாக பலர் மயங்கி விழுந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
ALSO READ: ஆப்கானிஸ்தானிலிருந்து டெல்லி வந்தவர்களுக்கு கோவிட் தொற்று: மருத்துவமனையில் அனுமதி
இருப்பினும், தாலிபான்கள் அவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக அவர்களை அடித்து வருகின்றனர். இந்த கடினமான நேரத்தில் அமெரிக்க (America) மற்றும் பிரிட்டிஷ் வீரர்கள் ஆப்கானியர்களுக்கு உதவுகிறார்கள். விமான நிலையத்திற்கு அருகில் தற்காலிக வீடுகளை கட்டி குடியிருப்புவாசிகளுக்கு படையினர் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் உணவுகளை வழங்கு வருகின்றனர். இது தவிர, ஆப்கானிஸ்தானின் சிறு குழந்தைகளுக்கு சிப்ஸ் பாக்கெட்டுகளை வீரர்கள் விநியோகிப்பதையும் காண முடிகிறது.
இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சியுள்ளன...
தகவலின் படி, அமெரிக்கா கடந்த 10 நாட்களில் ஆப்கானிஸ்தானில் இருந்து 70,700 பேரை வெளியேற்றியுள்ளது. இருப்பினும், ஆப்கானிஸ்தானின் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இன்னும் காபூல் விமான நிலையத்தில் சிக்கியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் 2.5 லட்சம் மக்கள் தாலிபான்களால் அதிக ஆபத்தில் உள்ளனர். அவர்களில் 60 ஆயிரம் பேர் மட்டுமே அதன் பிடியிலிருந்து தப்பிக்க முடிந்தது. ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் காபூலை விட்டு வெளியேறுமாறு வெளிநாட்டுப் படைகளுக்கு தாலிபான் உத்தரவிட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், சில நாட்களில் சுமார் 2 லட்சம் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது மிகக் கடினம் என்பது கசப்பான உண்மையாகும்.
விமான நிலையத்தை அடைவதற்கு தடையாக செயல்படும் தாலிபான்
விமான நிலையத்திற்குள் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் வீரர்கள் இருந்தாலும், விமான நிலையம் வெளிப்புறத்தில் தாலிபான்களால் சூழப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் தாலிபான் போராளிகளும் உள்ளனர். அவர்கள் மக்கள் விமான நிலையத்தை அடைவதை தடுத்து வருகின்றனர். விமான நிலையம் செல்லும் மக்கள் தாலிபான்களால் அச்சுறுத்தப்படுகிறார்கள்.
அமெரிக்காவிடம் இருந்து உதவி பெற்று ஏன் சமூகத்தை இழிவுபடுத்துகிறீர்கள் என்று பயங்கரவாதிகள் மக்களிடம் கேட்கிறார்கள்? ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் பிடியில் வந்தது முதல், தாலிபான் கொடூரத்தின் கதைகள் ஒவ்வொரு நாளும் வெளிவந்த நிலையில் உள்ளன. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் தாலிபான்களால் அதிகம் துன்புறுத்தப்படுகிறார்கள்.
ALSO READ: Afghan crisis: டோக்கியோ பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் ஆப்கன் தேசியக் கொடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR