PM Gatishakti Scheme: அனைவருக்கும் வேலைவாய்ப்பு, ரூ.100 லட்சம் கோடி அசத்தல் திட்டம்

கதிசக்தி தேசியத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு ரூ .100 லட்சம் கோடியை செலவிடும். இந்தத் திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், நாட்டின் உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்படும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 15, 2021, 12:40 PM IST
PM Gatishakti Scheme: அனைவருக்கும் வேலைவாய்ப்பு, ரூ.100 லட்சம் கோடி அசத்தல் திட்டம் title=

புதுடெல்லி: நாட்டின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பெரிய பரிசை வழங்கியுள்ளார். பிரதமர் மோடி 'கதிசக்தி தேசியத் திட்டம்' குறித்து இன்று அறிவித்தார்.

செங்கோட்டையில் (Red Fort) இருந்து ஆற்றிய உரையில் பிரதமர் மோடி இதை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், மத்திய அரசு ரூ .100 லட்சம் கோடியை செலவிடும். இந்தத் திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், நாட்டின் உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்படும்.

நாட்டின் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்

செங்கோட்டையிலிருந்து நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, நவீனமயமாக்கலின் மூலம், இந்தியா அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்த அனைத்து சுற்று வளர்ச்சியையும் செய்ய வேண்டும் என்று கூறினார். கதிசக்தி-தேசிய முதன்மை திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.

இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன?

100 லட்சம் கோடிக்கு மேல் செலவாகும் இந்த கதிசக்தி திட்டம், நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அனைத்து வகையான உள்கட்டமைப்பின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று பிரதமர் மோடி (PM Modi) கூறினார். இத்தகைய முயற்சியால், உள்ளூர் உற்பத்தியாளர்களையும் உலக அளவில் போட்டியிட வைக்க முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இதனுடன், எதிர்காலத்தில் புதிய பொருளாதார மண்டலங்களை உருவாக்கும் சாத்தியங்களும் உருவாகும்.

ALSO READ: நாட்டின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும்- பிரதமர் மோடி

உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்கும் இலக்கை நோக்கி இந்தியா பயணிக்கிறது

7 ஆண்டுகளுக்கு முன்பு, 8 பில்லியன் டாலர் மதிப்புள்ள மொபைல் போன்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாக பிரதமர் கூறினார். ஆனால் இப்போது இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள மொபைல் போன்களை ஏற்றுமதி செய்கிறது. உலகத் தரம் வாய்ந்த உற்பத்தியை உருவாக்கும் நாடாக நாம் முத்திரை பதிக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். சிறந்த கண்டுபிடிப்பு மற்றும் நவீன கால தொழில்நுட்ப முறைகளை வளர்க்கும் நாடாக இந்தியா உருவாகும் என்றார் பிரதமர் மோடி.

வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்முனைவோர்

2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளின் (Farmers) மீது தான் அரசின் கவனம் உள்ளது என்றும் நாட்டின் 80 சதவீத விவசாயிகள் இப்படி இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். கிராமப்புறங்களிலும் பெரிய மாற்றங்கள் நிகழ்கின்றன. இப்போது கிராமங்களிலிருந்தும் டிஜிட்டல் தொழில்முனைவோர்  வருகிறார்கள் என்று அவர் கூறினார்.

ALSO READ | 75வது சுதந்திர தினம்- தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News