லண்டன்: மக்களே உஷார்!! வேகமாக பரவி வருகிறது கோவிட் தொற்றின் மற்றொரு வகை!! அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் ஓமிக்ரானின் துணைவகையான BA.4.6, தற்போது இங்கிலாந்திலும் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து சுகாதார செக்யூரிட்டி ஏஜென்சியின் (UKHSA) கோவிட் மாறுபாடுகள் குறித்த சமீபத்திய சுருக்கமான ஆவணம், ஆகஸ்ட் 14 -ல் துவங்கிய முதல் வாரத்தில், இங்கிலாந்தில் BA.4.6 மாதிரிகள் 3.3 சதவீதமாக இருந்தன என்று குறிப்பிட்டது. இதேபோல், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் அறிக்கைகளில் இப்போது அமெரிக்கா முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய தொற்றுகளில் BA.4.6, 9 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இந்த மாறுபாடு அடையாளம் காணப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

BA.4.6 பற்றி இதுவரை அறியப்பட்ட விவரங்கள் என்ன? இதன் வீரியம் என்ன? 


1) BA.4.6 என்பது ஓமிக்ரானின் பிஏ.4 மாறுபாட்டின் வழித்தோன்றலாகும்.


2) BA.4 முதன்முதலில் ஜனவரி 2022 இல் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இது BA.5 மாறுபாட்டுடன் உலகம் முழுவதும் பரவியது.


3) BA.4.6 எப்படி உருவானது என்பது முற்றிலும் தெளிவாக இல்லை. ஆனால் அது ஒரு மறுசீரமைப்பு மாறுபாடாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.


4) BA.4.6 பல வழிகளில் BA.4 ஐப் போலவே இருக்கும். இது வைரஸின் மேற்பரப்பில் உள்ள புரதமான ஸ்பைக் புரதத்திற்கு ஒரு பிறழ்வைக் கொண்டு செல்கிறது. இது நமது செல்களுக்குள் நுழைய அனுமதிக்கிறது.


5) R346T என்ற இந்த பிறழ்வு, பிற வகைகளிலும் காணப்பட்டுள்ளது. இது நோயெதிர்ப்பு ஏய்ப்புடன் தொடர்புடையது. அதாவது தடுப்பூசி மற்றும் முன்னர் ஏற்பட்ட தொற்றுநோயிலிருந்து பெறப்பட்ட ஆன்டிபாடிகளிலிருந்து தப்பிக்க இது வைரசுக்கு உதவுகிறது. 


மேலும் படிக்க | கொரோனாவின் அக்டோபஸ் கரங்களில் சீனா! லாக்டவுன் மற்றும் பொதுஜன சோதனைகள் மும்முரம் 


6) அதிர்ஷ்டவசமாக, ஓமிக்ரான் நோய்த்தொற்றுகள் பொதுவாக குறைவான தீவிர நோய்களை ஏற்படுத்துகின்றன. மேலும் முந்தைய மாறுபாடுகளை விட ஓமிக்ரானால் குறைவான இறப்புகளையே உலகம் கண்டுள்ளது. 


7) இந்த மாறுபாடு மிகவும் கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்துவதாக இதுவரை எந்த அறிக்கையிலும் தெரிவிக்கப்படவில்லை. 


8) BA.4.6, தற்போது ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடான BA.5 ஐ விட நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தவிர்ப்பதில் சிறந்ததாகத் தோன்றுகிறது. ஆகையால் இதனால் பாதிப்பு அதிகமாக இருக்கலாம். இருப்பினும் இந்தத் தகவல் ஒரு முன்அச்சு அடிப்படையிலானது (இது இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை).


9) ஃபைசரின் அசல் கோவிட் தடுப்பூசியின் மூன்று டோஸ்களைப் பெற்றவர்கள் BA.4 அல்லது BA.5 வைரஸ்களுக்கு எதிராக குறைவான ஆன்டிபாடிகளையே உற்பத்தி செய்வதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது கவலையளிக்கிறது. ஏனெனில் கோவிட் தடுப்பூசிகள் பிஏ.4.6 க்கு எதிராக குறைவான செயல்திறன் கொண்டதாக இருக்கலாம் என்பதை இது சுட்டிக்காட்டுகின்றது.


10) BA.4.6 மற்றும் பிற புதிய மாறுபாடுகளின் தோற்றம் உலகளவில் கவலைகளை அதிகரித்துள்ளது. எனினும், தடுப்பூசியானது கடுமையான நோய்களுக்கு எதிராக தொடர்ந்து நல்ல பாதுகாப்பை அளிக்கிறது என்பதையும், கோவிட்-ஐ எதிர்த்துப் போராடுவதற்கு இதுவே சிறந்த ஆயுதம் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


மெலும் படிக்க | BA 5 வகை ஒமிக்ரானின் புதிய அறிகுறிகள்! உங்களுக்கு இப்படி இருந்தா கவனமா இருங்க 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ