நாடு முழுவதும் ரயில் சேவை செப்டம்பர் 30ம் தேதி வரை தடை: இந்திய ரயில்வே அறிவிப்பு
நாடு முழுவதும் ரயில் சேவை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை தடை என இந்திய ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
புது டெல்லி: கொரோனா தொற்றுநோய் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் செப்டம்பர் 30 வரை அனைத்து அஞ்சல் / எக்ஸ்பிரஸ், பயணிகள் மற்றும் புறநகர் ரயில் ரயில் சேவைகளுக்கான தடை தொடரும் என இந்தியன் ரயில்வே (Indian Railway) வாரியம் அறிவித்துள்ளது.
முன்னதாக, தொற்று வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என்று வாரியம் கூறியிருந்தது.
இந்திய துணைக் கண்டத்தில் அதிகரித்து வரும் தொற்றுநோயின் அச்சத்தை கருத்தில் கொண்டு, ரயில் சேவைகளை ரத்து செய்வதை 2020 செப்டம்பர் இறுதி வரை நீட்டிப்பதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
இருப்பினும், தற்போது இயக்கத்தில் உள்ள 230 சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும்.
இந்தியாவில் இதுவரை 22,15,074 கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளன, 44,386 பேர் வைரஸ் காரணமாக இறந்துள்ளனர்.