இந்தியாவில், கடந்த ஆண்டிலிருந்து மிக அதிக அளவாக, ஒரே நாளில் 46,951 புதிய COVID-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை 46,951 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அதில் மகாராஷ்டிராவில் மட்டும் 30,535 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.


COVID-19 பரவலை ஒடுக்க பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், நாட்டின் தற்போது மீண்டும் COVID-19 தொற்று பாதிப்புகள் திடீரென அதிகரித்து வருவதால் மீண்டும் ஆபத்தான நிலையில் உள்ளது.


ஜனவரி 12 ஆம் தேதிக்குப் பிறகு, நாடு முழுவதிலும் பதிவாகும் இறப்புகளின் எண்ணிக்கை  முதன்முறையாக 212 என்ற எண்ணிக்கையைத் தாண்டியது. நாட்டின் மொத்த தொற்று பாதிப்புகள் 1 கோடியே 16 லட்சமாகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 1,59,967 ஆகவும் உள்ளது.


கொரோனா தொற்று (Corona Virus) பாதிப்பினால், சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை இப்போது 3.34 லட்சத்திற்கு மேல் உள்ளன. 


ஞாயிற்றுக்கிழமை வரை 23,44,45,774 பேருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவற்றில் 8,80,655 பேருக்கு ஞாயிற்றுக் கிழமை பரிசோதிக்கப்பட்டதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது.


ALSO READ | ஜூஸ் அல்லது டீயுடன் மருந்து சாப்பிடுகிறீர்களா? உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்


மொத்த தொற்று பாதிப்புகளில் மிக அதிக அளவாக, மகாராஷ்டிராவில் , ஒரே நாளில், 30,535 புதிய COVID-19 தொற்று பாதிப்பு பதிவாகியது. மகாராஷ்டிராவில், மொத்த தொற்று பாதிப்பு 24,79,682 ஆகும்.


டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 21) மொத்தம் 823 புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன. 


சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, பஞ்சாப் (2,644), கேரளா (1,875), கர்நாடகா (1,715), குஜராத் (1,580) என்ற அளவில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றூ பாதிப்புகள் பதிவு செய்துள்ளன.


மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் மக்கள் காட்டிய கவனக்குறைவு தான் சமீபத்திய தொற்று பாதிப்பு அதிகரித்ததற்கான காரணம் என்றார். எனவே, மக்கள் கொரோனாவிற்கான வழிமுறைகளை கவனமாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


ALSO READ | ஒரு நாளில் எத்தனை முட்டை சாப்பிடலாம்.. கோடையில் முட்டை சாப்பிடலாமா..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR