பெங்களூருவின் Stelis Biopharma Sputnik V தடுப்பூசியை தயாரிக்க உள்ளது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஸ்ட்ரைட்ஸ் பார்மா சயின்ஸின் ஸ்டெலிஸ் பயோபார்மா (Stelis Biopharma), தற்போது இந்தியாவில் அவசர அங்கீகாரத்திற்காகக் காத்திருக்கும் ரஷ்ய கோவிட் -19 தடுப்பூசியான ஸ்பூட்னிக் (V Sputnik V) தடுப்பூசியின் 20 கோடி டோஸ்களை தயாரித்து வழங்கவுள்ளது.
சமீபத்திய ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 550 மில்லியன் என்ற அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் (RDIF) கூட்டு சேர்ந்துள்ள ஸ்டெலிஸ், இந்த தடுப்பூசியின் உற்பத்தி திறனை உயர்த்துவதற்காக இந்திய மருந்து தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்து வருகிறது
2021 ஜூலை முதல் செப்டம்பர் மாத காலத்திற்குள் ஸ்பூட்னிக் வி (Sputnik V) விநியோகத்தை தொடங்க ரஷ்ய நிறுவனம் விரும்புகிறது.
ALSO READ | Oxford-AstraZeneca கோவிட் தடுப்பூசிகள் பாதுகாப்பானதா.. எய்ம்ஸ் தலைவர் கூறுவது என்ன..!!!
ஸ்பூட்னிக் வி தடுப்பூசி தொடர்பாக ரஷியாவுடன் கூட்டுசேர்ந்த நான்காவது இந்திய நிறுவனம் ஸ்டெலிஸ் நிறுவனம் ஆகும். ரஷ்ய தடுப்பூசி தயாரிக்கும் மூன்றாவது உற்பத்தியாளராக லெலிஸ் இருக்கும்.
இந்த வார தொடக்கத்தில், ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட கிளாண்ட் பார்மா (Gland Pharma ) 252 மில்லியன் டோஸ் வரை ஸ்பூட்னிக் வி உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது. கடந்த ஆண்டு, ரஷ்யா, மற்றொரு ஹைதராபாத் நிறுவனமான ஹெட்டெரோ பயோபார்மா (Hetero Biopharma) உடன் 100 மில்லியன் டோஸ் வரை தயாரிக்க ஒப்பந்தம் செய்தன.
இந்த நிறுவனங்களைத் தவிர, டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் ரஷ்யா உடன் உடன் இந்தியாவில் ஸ்பூட்னிக் வி (Sputnik V) ஆய்வு செய்து நாட்டில் அதன் அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க ஒப்பந்தம் செய்துள்ளன. ஒப்புதல்களைப் பெற்றவுடன் RDIF வழங்கும் தடுப்பூசியை சுமார் 200 மில்லியன் டோஸ்கள் அளவிற்கு விநியோகிக்க முடியும்.
ALSO READ | X-ray கொடுத்த ஷாக்... பிறப்பில் தான் ஆண் என்பதை அறிந்த மணமான பெண் அதிர்ச்சி..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR