COVID-19 Update: இந்தியாவில் கடந்த 63 நாட்களில் முதல் முறை பதிவாகியுள்ள குறைந்த அளவு பாதிப்புகள்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது நம்பிக்கை அளிக்கும் விஷயம். 63 நாட்களில் மிகக் குறைந்த புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது நம்பிக்கை அளிக்கும் விஷயம். 63 நாட்களில் மிகக் குறைந்த புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளது.
இந்தியாவில், கடந்த சில வாரங்களாக சராசரி தினசரி பாதிப்புகள் குறைந்து வருகின்றன. செவ்வாயன்று, ஒரு நாளில் பதிவான புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை கடந்த இரு மாதங்களில் முதல் முறையாக 60,000 க்கும் கீழே குறைந்தது.
இது சிறிது நிம்மதியை கொடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வழக்குகள் செவ்வாயன்று (அக்டோபர் 13, 2020) கிட்டத்தட்ட இரண்டு மாத காலத்திற்குப் பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கையை பதிவு செய்தன. கடந்த 24 மணி நேரத்தில் பதிவு செய்யப்பட்ட புதிய தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 55,342 ஆக உள்ளது. கடந்த சில வாரங்களாக, இந்தியாவில் தொடர்ந்து 70,000 புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகின
இந்தியாவில் ஜூலை 31 (55,078), ஆகஸ்ட் 4 (52,050) மற்றும் ஆகஸ்ட் 18 (55,079) என்ற அளவில் சுமார் 55,000 புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகின.
கடந்த ஐந்து வாரங்களில் சராசரி தினசரி தொற்று பாதிப்புகள் குறைந்து வருகின்றன. ஒரு மாதத்திற்குப் பிறகு, அக்டோபர் 9 ஆம் தேதி, ஆக்டிவ் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 9 லட்சத்தை விடக் குறைவாக இருந்தது என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கூறியதிலிருந்து, தொடர்ந்து புதிய தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 706 இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளதால் இறப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
மேலும் படிக்க | COVID-19 தடுப்பு மருந்து பரிசோதனையை நிறுத்திய Johnson & Johnson.. காரணம் என்ன ..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe