இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 92,605 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் -19  தொற்று காரணமாக 1,133 இறப்புகள் ஏற்பட்டுள்லது. மொத்த தொற்று எண்ணிக்கை 54 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில் 10,10,824 ஆக்டிவ் நோயாளிகள், 43,03,044 குணமடைந்துள்ளனர். இதுவரை 86,752 பேர் இறந்துவிட்டனர் என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா (Corona) நோயிலிருந்து  குணமடையும் விகிதம் 79.68 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், இறப்பு விகிதம் 1.61 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கொரோனா தொடர்பான நிலைமையை மறுஆய்வு செய்வதற்காக அடுத்த வாரம் மோசமான பாதிப்புக்குள்ளான ஏழு மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ( PM Narendra Modi) ஆலோசனை நடத்துவார். இந்த சந்திப்பு செப்டம்பர் 23 ம் தேதி நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 


ALSO READ | ₹2000 நோட்டுகள் நிலை என்ன... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த அறிக்கை..!!!


செப்டம்பர் 19 வரை 6,36,61,060 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.


32,216 இறப்புகள் உட்பட 11,89,815  தொற்று பாதிப்புகளுடன் மகாராஷ்டிரா தொடர்ந்து அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.


டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று மொத்த எண்ணிக்கை 2.42 லட்சத்தை தாண்டியுள்ளது.


COVID-19 தொற்றுநோயைத் தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கும் முயற்சியாக, செப்டம்பர் 21 திங்கள் முதல், மும்பையில் தினசரி சிறப்பு புறநகர் சேவைகளின் எண்ணிக்கையை 350 திலிருந்து 500 ஆக உயர்த்த மேற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.


COVID-19 தொற்றுநோயால் ஆறு மாதங்கள் மூடப்பட்ட பின்னர் தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை ஆகியவை திங்கள்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன.


ALSO READ | எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில், வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது..!!!